சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் ரெடி.. தடையே போட்டாலும் கவலை இல்லை.. பொதுக்குழுவுக்கு பக்காவா ஷெட்யூல் போட்ட எடப்பாடி!

Google Oneindia Tamil News

சென்னை : கொரோனா பரவல் காரணமாக பொதுக்குழுவுக்கு தடை ஏற்படும் பட்சத்தில் பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்தும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதால், நிர்வாகிகளுக்கு ஆன்லைனில் பங்கேற்பது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

Recommended Video

    ADMK General Meeting | உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய வைத்திலிங்கம், புகழேந்தி - வீடியோ

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஜூலை 11ஆம் தேதி நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி முடித்து, பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆன்லைன் வாயிலாக பொதுக்குழுவை நடத்தும் திட்டத்தையும் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, இதற்காக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

    இது விளையாட்டுக்கு கிடைத்த கெளரவம்.. குரல் எழுப்புவேன்.. நெகிழ்ச்சியில் தடகள வீராங்கனை பிடி உஷா!இது விளையாட்டுக்கு கிடைத்த கெளரவம்.. குரல் எழுப்புவேன்.. நெகிழ்ச்சியில் தடகள வீராங்கனை பிடி உஷா!

    அதிமுக பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு

    எடப்பாடி பழனிசாமி திட்டப்படி, ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு, பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஈபிஎஸ் தரப்பு அழைப்பிதழ் அனுப்பியுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டத்தில் பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்த பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளனர்.

    க்யூ ஆர் கோடு

    க்யூ ஆர் கோடு

    பொதுக்குழு கூட்டத்துக்கு வரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில் க்யூஆர் கோடு, ஆர்எஃப்ஐடி வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் ஊடுருவினால் பிரச்சனை ஏற்படும் என்பதற்காக இந்த ஏற்பாடாம். கடந்த பொதுக்குழுவில் நடந்த சம்பவங்கள் பற்றி நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம் வைக்கும்போது, இந்த பாதுகாப்பு நடவடிக்கையைக் சொல்லவும் உத்தேசித்துள்ளதாம் ஈபிஎஸ் தரப்பு.

    கொரோனா காரணமாக

    கொரோனா காரணமாக

    இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பொதுக்குழுவுக்கு தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுக்குழு நிகழ்விற்கு சமூக இடைவெளியை பின்பற்றி 3 ஆயிரம் இருக்கைகள் போடப்பட உள்ளது. இதற்காகவே, உள்ளரங்கத்தில் பொதுக்குழு நடத்தாமல் திறந்தவெளியில் பந்தல் அமைத்து பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    உறுப்பினர்களுக்கும் தகவல்

    உறுப்பினர்களுக்கும் தகவல்

    கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடைசி நேரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு அரசு தடை விதிக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் அதுகுறித்து ஆலோசித்த ஈபிஎஸ் தரப்பினர் மாற்று வழியையும் கண்டறிந்துள்ளனர்.ஆன்லைன் மூலம் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த மாற்றுத் திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமி, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து, இது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் பயிற்சி

    ஆன்லைன் பயிற்சி

    பொதுக்குழுவுக்கு கொரோனா காரணமாக கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டால், அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்த பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்கும் அதிமுகவினருக்கான பயிற்சி முகாம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியுள்ளது. நேற்று அதிமுக தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

    சமூக வலைதள பயிற்சி

    சமூக வலைதள பயிற்சி

    இந்தப் பயிற்சியானது சமூக வலைதளங்களில் அதிமுகவிற்கு எதிராக வரும் கருத்துகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்காக தொண்டர்களுக்கு நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியிலேயே பொதுக்குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு ஆன்லைனில் பொதுக்குழு நடைபெற்றால் எப்படி பங்கேற்பது என்பது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    மாவட்ட வாரியாக

    மாவட்ட வாரியாக

    இந்தப் பயிற்சியில் மாவட்ட செயலாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். அவர்கள் மூலம் மற்ற பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் மாவட்ட வாரியாக பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எப்படியும் பொதுக்குழுவை நடத்தி மகுடம் சூடியே தீருவது என்கிற திட்டத்தில் இருக்கும் ஈபிஎஸ், ஆன்லைன் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைக்கச் சொல்லியிருக்கிறாராம்.

    English summary
    Edappadi Palaniswami is planning to hold ADMK General body meeting via online in case meeting is suspended due to Corona. Following this, trainings are being given to the executives on how to participate in the general body meeting online.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X