Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ்ஸை திட்டவா தேனி வந்துருக்கேன்? தடம் மாறும் சவுத் மாஜிக்கள்! சல்லடை போட்டு தேடும் எடப்பாடி டீம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் நிர்வாகிகள் ஆதரவு தனக்கு தான் இருக்கிறது என தைரியமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாக தென் மாவட்ட முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், ஓ பன்னீர்செல்வத்துடன் நெருக்கம் காட்டுகிறார்களா என்ற சந்தேகத்தில் அவர்களை கண்காணிக்க தனி குழுவையே நியமித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான நிகழ்வுகளை அக்கட்சி தொண்டர்களே ரசிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு அதிகார மோதலால் பல அணிகளாக சிதறுண்டு கிடக்கிறது கட்சி.

வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட முடியாமல் அதிமுக திணறி வருவதை பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிப்பதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதை எல்லாம் கட்சி தலைமை கண்டு கொள்வதாக தெரியவில்லை.

அதிமுக விவகாரம்

அதிமுக விவகாரம்

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டவை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது தசரா பண்டிகை விடுமுறைக்கு பிறகு இந்த வழக்கு விசாரணை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

சுணக்கம் காட்டும் மாஜிக்கள்

சுணக்கம் காட்டும் மாஜிக்கள்

இது சற்றே பின்னடைவாக இருந்தாலும் எப்படியும் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் ஆதரவு தனக்கே இருப்பதால் தேர்தலில் வெற்றிவாகை சூடிவிடலாம் என நம்பிக்கையில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனிடையே தனது சொந்த ஊரான சேலத்தில் தற்போது தங்கியுள்ளவர் உள்ளூர் நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவரிடம் சென்ற தகவல்கள் தான் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர் சேலம் தரப்பு ரத்தத்தின் ரத்தங்கள். இது குறித்து விசாரித்த போது கடந்த சில நாட்களாகவே தென் மாவட்ட முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளில் மாற்றம் தெரிவதாக எடப்பாடி பழனிசாமிடம் சிலர் கூறியிருக்கின்றனர்.

கடும் கொந்தளிப்பு

கடும் கொந்தளிப்பு

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பேச்சு அதிமுகவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை முற்றிலும் கட்சியிலிருந்து நீக்கிவிடலாம் என எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு வரும் நிலையில் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் சந்திப்போம் என கூறி இருந்தார். இதன் மூலம் அவர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் பேசியிருப்பதாக ஓபிஎஸ் அணியினர் தகவல்களை பரப்பி வருகின்றனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதால் மணிகண்டன் அவர் தரப்புக்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஓபிஎஸ்க்கு சாதகம்?

ஓபிஎஸ்க்கு சாதகம்?

இதே போல அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட போது முன்னாள் அமைச்சர்களின் பேச்சு ஓபிஎஸ்-க்கு சாதகமாகவே இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டங்களை பயன்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டும் என கூறியிருந்ததாகவும் ஆனால் அதனை தென் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான அமைச்சர்கள் பின்பற்றவில்லை. திமுகவையும் திமுக அரசையும் விமர்சிப்பதிலேயே பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களும் ஆர்வம் காட்டினர்.

விமர்சிக்கவில்லை

விமர்சிக்கவில்லை

தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஓபிஎஸ்ஐ விமர்சித்து பேச வேண்டும் என உள்ளூர் தொண்டர்கள் ஆர்ப்பரித்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்த திண்டுக்கல் சீனிவாசன் கண்டுகொள்ளவில்லை. ஓபிஎஸ்ஐ பற்றி பேசுவதற்கு நான் திண்டுக்கல்லில் இருந்து தேனி வந்திருக்கிறேன் என தொண்டர்களை பார்த்து கோபமாகவே பேசினார். இந்த தகவலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்று சேர்ந்து இருக்கிறது. எனவே சில முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ் தரப்புக்கு தாவி விடுவார்களோ என்ற ஐயப்பாடும் இருந்திருக்கிறது.

சிறப்பு குழு?

சிறப்பு குழு?

இதனை அடுத்து தனக்கு நெருக்கமான கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தென் மாவட்டங்களில் ஒரு கண் வைக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார். மேலும் தொலைக்காட்சி பேட்டிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பேசும் அமைச்சர்களின் பேச்சை கவனித்து தனக்கு அறிக்கை அளிக்குமாறு சிறப்பு குழு ஒன்றையும் ஐடி விங் நிர்வாகிகள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி நியமித்திருப்பதாகவும், தற்போது இந்த பேச்சே அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியதாகவும் கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+