மீண்டும் இரட்டை இலைகள்! பேசாம இருங்கண்ணே! அதிமுக ரத்தத்தின் ரத்தங்களுக்கு பறந்த உத்தரவு! ஓ அது தானா?
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் தற்போது மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு இரு தரப்பு தலைமையும் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி இருக்கிறது.
அதிமுகவில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாகவே இலைமறை காயாக இருந்த அதிகாரமோதல் தற்போதைய குறுகிய காலத்தில் பூதாகரமாக வெடித்து கிளம்பி இருக்கிறது. இதனால் கட்சி மீண்டும் இரண்டாக பிரிந்துள்ளது.
ஓபிஎஸ் நீக்கம், எடப்பாடி இடைக்கால பொதுச் செயலாளராக நியமனம், பொதுச் செயலாளர் தேர்வு என அடுத்தடுத்து பல்வேறு அதிரடி முடிவுகள் அதிமுகவில் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் ஒரே ஒரு விவகாரம் தான் முடிவுரை எழுதப் போகிறது.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில் அதனை எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு கிடைத்ததால் மீண்டும் அதிமுகவில் அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இது பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

ரத்தத்தின் ரத்தங்கள்
இந்த நிலையில் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் பல நிகழ்வுகள் ஓபிஸ்க்கு எதிராகவே இருக்கும் நிலையில் இந்த தீர்ப்பும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கும் என்கின்றனர் இபிஎஸ் ஆதரவாளர்கள். அதே நேரத்தில் தங்கள் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வர அதிக சாத்திய கூறுகள் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறுகின்றனர். இப்படி இரு தரப்பு நிர்வாகிகளும் மாறி மாறி பேசுவதில் அதிமுகவில் அடிமட்ட தொண்டர்களாக உள்ள ரத்தத்தின் ரத்தங்கள் கடும் மன உளைச்சலில் இருக்கின்றனர். இது சமூக வலைதளங்களில் கண்கூடாக தெரிகிறது.

அமித் ஷா அறிவுரை?
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். அரசியல் பேசவில்லை என அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினாலும் அதிமுக உட்கட்சி விவகாரங்களே இந்த பேச்சில் பிரதானமாக இடம் பெற்றது என்கின்ற விவரம் அறிந்த அதிமுகவினர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அமித்ஷா கூறியதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் இதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர்கள் முற்றாக மறுத்து இந்த நிலையில் தான் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நிர்வாகிகளுக்கு இரு தரப்பு தலைமைகளும் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்து இருக்கின்றனர்.

நிர்வாகிகளுக்கு உத்தரவு
அதாவது கடந்த காலத்தை போலவே அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான சாத்திய கூறுகள் லேசாக துளிர் விட துவங்கியிருப்பதாக மேற்கு மண்டல நிர்வாகிகள் அமித் ஷாதாவின் பேச்சில் இது வெளிப்படையாக தெரிந்ததாக கூறுகின்றனர். அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி தரப்பு முன்னாள் அமைச்சர்கள் ஆவேசமாக பேசினால் தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற அதிருப்தி உருவாகும் என்பதால் யாரும் விமர்சித்து பேச வேண்டாம் என உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். இதன் காரணமாகவே செய்தியாளர்களை சந்திப்பில் கடத்த சில நாட்களாக ஆவேசமாக பேசி வந்த முன்னாள் அமைச்சர்கள் அமைதி காக்கின்றனர். தேனியில் கூட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்ற கூட்டத்தில் ஓபிஎஸ் பற்றி பேசுங்கள் என தொண்டர்கள் வெளிப்படையாகவே கேட்ட நிலையில் அவரைப் பற்றி திண்டுக்கல் சீனிவாசன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications