வாயை திறக்க கூடாது.. வேற மாதிரி ஆயிரும்..! மா.செ.க்களுக்கு பறந்த உத்தரவு! கடுப்பில் அமர்ந்த இபிஎஸ்!
சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது இதில் சட்டமன்ற கூட்டத் தொடரை எதிர்கொள்வது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்ட நிலையில் முக்கியமான உத்தரவு ஒன்றை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்எல்ஏக்களுக்கு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக நாளுக்கு நாள் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
திட்டமிட்டபடி நேற்று மாலை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நடந்த விவகாரங்கள் தான் தற்போது அதிமுகவில் பேசுபொருளாகி இருக்கிறது.

அதிமுக கூட்டம்
இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம், அன்பழகன், ஆர்பி உதயகுமார், சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர் ராஜேந்திர பாலாஜி செங்கோட்டையன் உள்ளிட்ட பாலர் கலந்து கொண்டனர். எடப்பாடி அழைப்பை ஏற்று அனைவரும் கலந்து கொள்வார்களா அல்லது ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சிலர் ஆப்சன்ட் ஆவார்களா என எதிர்பார்க்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி
ஆனால் உண்மையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் என அனைவருமே ஆஜராகி இருந்தார்கள். மொத்தம் 69 மாவட்ட செயலாளர்கள், 61 சட்டமன்ற உறுப்பினர்கள், அமைப்பு செயலாளர் உள்ளிட்ட 56 தலைமைக் கழக நிர்வாகிகள் என 160 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் ஆஜராகி இருந்தார்கள். இதனால் ஓரளவு நிம்மதி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி கட்சி விவகாரங்கள் குறித்தும் சட்டமன்ற கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

உட்கட்சி விவகாரம்
குறிப்பாக அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசக்கூடாது எனவும் ஓபிஎஸ் தரப்பினர் தங்கள் தரப்பை விமர்சிப்பது போல பேசினாலும் தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் அளிக்கக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதிமுக பொன்விழா நிறைவு விழா உள்ளிட்டவற்றை சிறப்பாக கொண்டாட வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில் தான் ஓபிஎஸ்-ல் ஒரு புதிய பிரச்சனை அதிமுக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

கடுப்பான எடப்பாடி
அதாவது ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் தங்கள் மாவட்டங்களில் உள்ள ஒன்றிய செயலாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் பண்ருட்டி ராமச்சந்திரன் வருகைக்குப் பிறகும் இந்த பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்து இருக்கிறது. குறிப்பாக திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஒன்றிய செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இந்த தகவலை கேட்டதும் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தி அடைந்ததாகவும், அதே நேரத்தில் தற்போது அணி தாவல் பெரிய விவகாரம் ஆகிவிடும் என்பதால் அவர்களை கண்காணிக்க மூத்த அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications