சாலையில் இபிஎஸ்.. சட்டமன்றத்தில் ஓபிஎஸ்! கண்டிப்பாக செய்து தர்றோம்..துரைமுருகன் சொன்ன பதில்!
சென்னை : தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கைதான நிலையில், அதிமுக எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற கேள்வி நேரத்தில் கலந்து கொண்டார்.
பல்வேறு விவகாரங்கள் அரசியல் சிக்கல்களுக்கு இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
நேற்று இரண்டாவது நாளாக காலை 10 மணிக்கு அவை கூடிய நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், சபாநாயகர் அப்பாவுவுக்கு கடும் மோதல் எழுந்தது. எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசிக் கொண்டிருக்க ஓபிஎஸ்ஸோ அமைதியாக அமர்ந்திருந்தார்.

இருக்கை விவகாரம்
சபாநாயகர் அப்பாவு இருக்கை ஒதுக்கீடு விவகாரத்தில் யாருக்கு சாதகமாக நடந்து கொள்வார் என்பது பெரிய எதிர்பார்ப்பு நிலையில், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்சை அங்கீகரித்தார் சபாநாயகர் அப்பாவு. மேலும், எதிர்க்கட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களின் இருக்கைகளும் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனை காரணம் காட்டி அமளியில் ஈடுபட்டதால் இபிஎஸ் அணியினர் வெளியேற்றப்பட்டனர்.

ஓபிஎஸ்
இந்நிலையில் சட்டமன்றத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ஓபிஎஸ் ஒன்றுமே தெரியாதது போல் சபை நடவடிக்கைகள் முடிந்தது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக திமுக தலைவரும், அவரது பேச்சைக் கேட்டு சபாநாயகரும் செயல்படுவதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.மேலும் இது தொடர்பாக அனுமதி கேட்டு காவல்துறையிலும் மனு அளிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் போராட்டத்துக்கு சட்டம் ஒழுங்கை காரணம்காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் கருப்புச் சட்டை அணிந்து வந்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயக்குமார், கே.பி.முனுசாமி நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் ஆகியோர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கொந்தளித்த இபிஎஸ்
இதையடுத்து சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் அவர்களை வைத்து வைக்க போலீசார் ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் செய்தியாளர்களிடம் மிகவும் ஆவேசமாக பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ் - ஸ்டாலின் சட்டமன்ற கூட்டம் முடிந்த பிறகும் பேசிக் கொண்டிருந்ததாகவும் அதிமுகவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்துடன் ஸ்டாலின் கரம் கோர்த்திருப்பதாக ஆவேசமாக பேசினார். சில நேரங்களில் பேசவே முடியாத அளவுக்கு அதிக கொந்தளிப்போடு காணப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

சட்டசபை நிகழ்வுகள்
அதே நேரத்தில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை செயின் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேற்று போலவே ஓ.பன்னீர்செல்வம் எந்த வித சலனமும் இன்றி சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்றார். அவரது ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினரான ஐயப்பனும் சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று இருந்தார். தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்ற நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதில் அளித்துக் கொண்டிருந்தனர்.

துரைமுருகன்
அப்போது எழுந்த எம்எல்ஏ ஐயப்பன் தனது தொகுதியில் காங்கிரீட் கால்வாய் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை உறுப்பினர் கேள்வியாக எழுதி கொடுத்திருந்தால் நிச்சயம் செய்து வந்திருப்பேன் எனக் கூறிய அமைச்சர் துரைமுருகன் ஒன்றும் பிரச்சனை இல்லை எதுவாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது என்றால் நிச்சயம் செய்து தருவோம் என பதிலளித்தார். அதிமுக தரப்பில் மற்ற எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் மட்டும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications