தேவர் குருபூஜைக்கு ஈபிஎஸ் பசும்பொன் செல்லவில்லை.. திடீரென ரூட்டை மாற்றிய எடப்பாடி.. என்னாச்சு?
சென்னை : அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி முக்கிய தலைவர்கள் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லப் போவதில்லை என்றும் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேவர் தங்கக் கவசம் பெறுவதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினருக்கு இடையே பெரும் போட்டியே நடக்கும் நிலையில், பசும்பொன் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தேவர் ஜெயந்தி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு வரும் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. தேவர் ஜெயந்தி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்திக்கு பசும்பொன்னிற்கு மரியாதை செலுத்த வருவோர் காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்காக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அனுமதி கோரி காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திரளும் தலைவர்கள்
தேவர் ஜெயந்தி நிகழ்வையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதேபோல் அதிமுக, காங்கிரஸ், மதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என பலரும் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியையொட்டி அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லப்போவதில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கியில் இரு தரப்பும் மோதல்
தேவர் ஜெயந்தி, குருபூஜை நிகழ்வையொட்டி, பசும்பொன்னில் அமைந்திருக்கும் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்படும் தங்க கவசத்தை வங்கியிடம் பெற்று விழா கமிட்டியிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மோதி வருகின்றனர். ஜெயலலிதாவால் அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தை தங்கள் தரப்பிடம் ஒப்படைக்கக் கோரி இரு தரப்பினரும் வங்கியில் கடிதம் அளித்துள்ளனர். வங்கி நிர்வாகம் எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஈபிஎஸ் முயற்சிகள் பலனளிக்கவில்லை
எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா, சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனிடம் தங்கள் தரப்புக்கு தங்கக் கவசம் தர ஆதரவு கோரினர். ஆனால், யாருக்கும் சார்பாக இருக்க விரும்பவில்லை, நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என காந்தி மீனாள் கைவிரித்துவிட்டார். இந்நிலையில் தேவர் தங்கக் கவசம் தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

அதிகாரப்போட்டி
தேவர் தங்கக் கவசத்தை தங்கள் தரப்பு பெற்றால், தென் மாவட்டங்களில் குறிப்பாக முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் செல்வாக்கைக் காட்டலாம், ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கைச் சரிக்கலாம் என்பதற்காகவே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஈபிஎஸ் ஆதரவு மாஜிக்களும் இந்த திட்டத்தில் தீவிரமாக இறங்கினர்.

ஈபிஎஸ் பங்கேற்கவில்லை
இந்நிலையில், அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் செல்லாமல், சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

மாஜிக்கள் பங்கேற்பார்கள்
எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா, சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட முக்கிய அ.தி.மு.க நிர்வாகிகள் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்வில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.

என்னாச்சு?
தேவர் குருபூஜை நிகழ்வை தென் மண்டலத்தில் தங்கள் அணிக்கு வலுவாக அஸ்திவாரம் போடும் வாய்ப்பாக பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தேவர் தங்கக் கவசம் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாகவும், ஒருவேளை தங்கக் கவசத்தை தங்கள் தரப்பு பெற்றாலும், ஓபிஎஸ் தரப்பினரால் தான் பங்கேற்கும்போது சிக்கல் ஏற்படலாம், பிரச்சனைகள் உருவாகலாம் என்றும் கருதியே எடப்பாடி பழனிசாமி, பசும்பொன் செல்லும் திட்டத்தைக் கைவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!











Click it and Unblock the Notifications