சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"படித்தவர்கள்.." அன்புமணி ராமதாஸ் சொன்ன ஒற்றை வார்த்தை.. திருமாவளவனுக்கு ஆதரவாக அனல் பறந்த டுவிட்டர்

Google Oneindia Tamil News

சென்னை: கல்வி கற்றவர்கள் மற்றும் படித்தவர்கள் திருமாவளவனுக்கு தான் எங்கள் ஆதரவு என்றும், திருமாவளவன் எங்கள் தலைவர் என்றும் ஹேஸ்டேக் போட்டு ட்வீட் செய்ததால் தேசிய அளவில் டுவிட்டர் டிரெண்டில் அது இடம் பிடித்தது.

திடீரென எதற்காக இப்படி ஒரு ஹேஸ்டேக் செய்யப்பட்டது என்ற காரணம் ரொம்ப முக்கியமானது.

வழக்கமாக சமூக வலைத்தளத்தில் கட்சியினர் தங்கள் பலத்தைக் காட்டுவதற்காக போடப்படும் # trending இது கிடையாது என்பதுதான் இதில் கவனம் ஈர்க்க காரணம்.

அரக்கோணம் இரட்டைக் கொலை

அரக்கோணம் இரட்டைக் கொலை

சமீபத்தில் அரக்கோணம் அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு விரைந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். வேறு ஒரு ஜாதியினர் இந்த கொலையில் ஈடுபட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

 அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

இந்த நிலையில் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், எப்போதுமே திருமாவளவன் இவ்வாறு குற்றம்சாட்டி பேசுவது வாடிக்கையாகிவிட்டது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் அவரை விட்டு விலக தொடங்கிவிட்டனர் என்று அவர் தெரிவித்து இருந்தார். மேலும், இந்த கொலை மது பிரச்சினையால் ஏற்பட்டது. மது குடித்த இரு கோஷ்டிகள் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் என்று தெரிவித்தார்.

 படித்தவர்கள் ஆதரவு

படித்தவர்கள் ஆதரவு

இந்த நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மட்டும் கிடையாது.. அனைத்து சமூகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களும் திருமாவளவன் கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று பொருள்படும் வகையில், பல்வேறு நெட்டிசன்கள் இதுபோன்ற ஹேஸ்டேக்குகளை பயன்படுத்தி டுவிட்டரில் தங்கள் பதிவுகளை போட ஆரம்பித்தனர். #MyLeaderThiruma, #istandwiththiruma ஆகிய இரண்டு டேக்குகளை பயன்படுத்தினர்.

டாக்டர், இன்ஜினியர்கள்

டாக்டர், இன்ஜினியர்கள்

டாக்டர் படித்தவர்கள், வக்கீல் கல்வி படித்தவர்கள், இன்ஜினியர்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பட்டவர்களும் தங்களது கல்வி விவரத்தைக் குறிப்பிட்டு நாங்கள் திருமாவளவனுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று தெரிவித்தனர். இதன் மூலம் கல்வி கற்றவர்கள், திருமாவளவன் கொள்கையிலிருந்து விலகி செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு சமூக வலைத்தளம் மூலமாக பதில் கொடுத்துள்ளனர். இதோ சில பதிவுகளை நீங்களும் பாருங்கள்.

 சிவில் இன்ஜினியர்

சிவில் இன்ஜினியர்

நான் ஒரு சிவில் இன்ஜினியர். எனது தலைவர் திருமாவளவன் என்று அரவிந்த் குமார் என்பவர் தனது புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்துள்ளார்.

அரசியல் ஆசான்

அரசியல் ஆசான்

நான் எம்ஏ, எம்பில், பிஎச்டி படித்துள்ளேன். எனது அரசியல் ஆசான் திருமாவளவன் என்று செந்தில்குமார் என்ற நெட்டிசன் பதிவு செய்துள்ளார்.

குடும்பமே

குடும்பமே

இந்த நெட்டிசன் ஒருபடி மேலே போய், குடும்ப உறுப்பினர்கள் அனைவரது கல்வித் தகுதியையும் சொல்லியுள்ளார்.
எனது குடும்ப உறுப்பினர்களில் நான்- MA(Eng), MA(His), MA(PA), B.ED, D.T.Ed, PGELT,PGDCA படித்துள்ளேன். என் மனைவி- B.E (ECE)
சகோதரி- M.Com, B.Ed, சகோதரர்- M.SC, B.Ed, மைத்துனர்- M.SC B.Ed. நாங்கள் திருமாவளவனை ஃபாலோ செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
I stand with Viduthalai Chiruthaigal Katchi Thirumavalavan and my leader is Thirumavalavan, these are the hashtags are trending in Twitter from yesterday after Arakkonam double murder. PMK leader and Anbumani Ramadoss earlier released a video and accusing Thirumavalavan saying that those murders happened due to personal fight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X