அடமானம் வைத்து லோன் வாங்கிய முதிய தம்பதி.. வீட்டுக்கடன் EMI கட்டல.. ஒரே வாரத்தில் தலைகீழ் மாற்றம்
சென்னை: வயதான தம்பதி இருவரும் சாலையோரத்தில் தங்கி உள்ளனர்.. இவர்களுடன் ஆடு, மாடுகளும் தங்கி உள்ளன.. இந்த தம்பதிக்கு உதவுவதற்கு யாருமே இல்லை.. மழையில் நனைந்தபடியே இவர்கள் சாலையோரம் விழிபிதுங்கி கிடக்கிறார்கள்.. இப்படியொரு துயரம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.. என்ன காரணம்? யாரிந்த தம்பதி?
ஹாசன் மாவட்டம், அரகலகூடு தாலுகா கொரடகெரே கிராமத்தை சேர்ந்தவர் சன்னய்யா.. 80 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ஜெயம்மா... 75 வயதாகிறது..

இந்த தம்பதிக்கு ஒரே மகன்... அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், அவரது சிகிச்சைக்காக 2023ம் ஆண்டு தங்களுக்குச் சொந்தமான வீட்டை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து, 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர். ஆரம்பத்தில் ஓராண்டு வரை கடன் தவணைகளை முறையாக செலுத்தி வந்துள்ளனர்.
வீடு அடமானம் கடன்
ஆனால், மருத்துவச் செலவுகள் அதிகரித்ததும், வருமானம் இல்லாத நிலையிலும், கடும் பண நெருக்கடி ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக தவணைத் தொகையைச் செலுத்த முடியாத சூழல் உருவானது. இந்நிலையில், அந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நீதிமன்ற உத்தரவு பெற்றதாக சொல்லி, இந்த தம்பதியை வீட்டிலிருந்து ஒரு வாரத்துக்கு முன்பு வெளியேற்றி விட்டார்கள்..
அந்த வீட்டுக்கு பூட்டு போடப்பட்டதுடன், மாட்டுக் கொட்டகைக்கும் 'சீல்' வைத்து விட்டார்கள்.. தங்களுக்கு சொந்தமான வீட்டிலிருந்து வெளியேற சில மணி நேரம் கூட இந்த தம்பதிக்கு அவகாசம் வழங்கப்படவில்லையாம்.. உடமைகளை முழுமையாக எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லையாம்..
வீட்டுக்கடன் - சாலையோரம் ஒரு வாரம்
வீடு பூட்டப்பட்ட பிறகு, செல்ல வேறு இடமின்றி, அந்த தம்பதி தாங்கள் வளர்த்து வந்த பசு மாடுகளுடன் சாலையோரத்திலேயே தங்கும் சூழலுக்கு ஆளானார்கள்.. நடுரோட்டில் கற்களை அடுக்கி அடுப்பு வைத்து சமைத்து சாப்பிடுகிறார்கள்.. கால்நடைகளை அங்கேயே கட்டி வைத்து அவைகளுடன் உட்கார்ந்துள்ளனர்.. வெயிலிலும் மழையிலும், இந்த வயதான காலத்தில் சாலையோரம் தள்ளப்பட்டுள்ளனர்..
வீட்டோடு சேர்ந்து மாட்டுக் கொட்டகையும் பூட்டப்பட்டதால், கால்நடைகளுக்கு தீவனம் வைக்க இடமின்றி, பசு மாடுகளும் கடந்த ஒரு வாரமாக பசியால் தவிப்பதாக கண்ணீர் மல்க கூறுகிறார்கள்..
"எங்களுக்கே இடமில்லை, தண்ணீர் இல்லை.. இந்த மாடுகளை எங்கே கொண்டு போவது?" என்று அவர்கள் கண்கலங்கி கேட்கும் குரல், காண்போரை உலுக்கி எடுக்கிறது..
அரசுக்கு கண்ணீர் கோரிக்கை
வயதையும் கருத்தில் கொள்ளாமல், மனிதநேயமின்றி நிதி நிறுவனம் இவர்களிடம் இவ்வாறு நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது, அக்கம் பக்கத்தினர் உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை உதவிகளை தருகிறார்கள்.. ஆனாலும் அதிகாரிகள் தரப்பிலிருந்து இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்கிறார்கள் பொதுமக்கள்..
செல்ல இடமில்லாமல், வாழ்நாள் முழுவதும் உழைத்து கட்டிய வீட்டை இழந்து, வீதியில் உட்கார்ந்து அழுது கெஞ்சும் நிலைமை வந்துவிட்டதே? எங்களுக்குச் சொந்தமான வீட்டைத் திறந்து மீண்டும் எங்களிடமே ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில் அரசு எங்களுக்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்று முதிய தம்பதி கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீர்வு என்ன
தனியார் நிதி நிறுவனங்களின் அத்துமீறல்களுக்கு எதிராக முதியவர்கள் முறையற்ற ஜப்திக்கு எதிராக உடனடியாக புகார் அளிக்கலாம், முதியோர் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் கோட்டாட்சியரிடம் முறையிடலாம் நிதி நிறுவனத்தின் அச்சுறுத்தல்கள் குறித்து வங்கி குறைதீர்ப்பாளரிடம் புகார் செய்யலாம். இப்படி வழிமுறைகள் உள்ளன என்றாலும் அதிகாரிகள் இதில் தலையிட்டு முதிய தம்பதியின் கோரிக்கையை சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications