Satta bazaar சூதாட்ட மார்க்கெட்டின் கணிப்பை பாருங்க.. திமுக 140+ வெற்றியாம்.. தவெகவுக்கு 7 -9 சீட்!
சென்னை: ஃபலோடி சத்தா பஜார் எனும் சூதாட்ட மார்க்கெட்டில் நடக்கும் பெட்டிங்கில், திமுக கூட்டணி 140 - 143 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக 45 - 65 இடங்களில் வெல்லக்கூடும் என்றும், தவெக, 7 -9 இடங்களில் வெல்லக்கூடும் என்றும் சத்தா பஜார் பெட்டிங்கில் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு தேர்தலின்போதும் 'சத்தா பஜார்' எனப்படும் பெட்டிங் மார்க்கெட்டில் ஏராளமானோர் பந்தயம் கட்டுகிறார்கள். இதில், பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு பணம் புரள்கிறது. இந்தியாவில் மிகப்பெரிய சூதாட்ட மையமாக ராஜஸ்தானின் ஃபலோடி நகரம் விளங்குகிறது. ஃபலோடி மாவட்டத்தின் தலைநகரான ஃபலோடி நகரில் ரகசியமாக இயங்கும் 'பெட்டிங் மார்க்கெட்', 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பரபரப்பாகிவிட்டது.

பெட்டிங் மாஃபியாக்கள் 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக தங்கள் கணிப்புகளை பெட் கட்டி உள்ளனர். அரசியல் கட்சிகளின் செல்வாக்கு, வேட்பாளர் தேர்வு மற்றும் மக்களின் மனநிலை ஆகியவற்றை மிக நுணுக்கமாகக் கவனிப்பவர்கள் இதில் ஈடுபடுவதால், பல நேரங்களில் இவர்களின் கணிப்புகள் உண்மையான தேர்தல் முடிவுகளுக்கு நெருக்கமாக இருக்கும்.
எனினும், இது மக்களின் மனநிலையை கணக்கிட்டு நடத்தப்படும் கருத்துக்கணிப்பு அல்ல. பெட்டிங்கில் ஈடுபடும் நபர்களின் விருப்பம், சென்டிமெண்ட், கணிப்பு சார்ந்தது மட்டுமே. சத்தா பஜார் கணிப்புகள், தேர்தல் ரிசல்ட் உடன் பெரும்பாலும் ஒத்துப்போவதால் இந்த கணிப்புகள் எப்போதும் கவனம் பெறுகின்றன.
அதன்படி, தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்பதே பலோடி சத்தா பஜார் பெட் கேங்கின் கணிப்பாக இருக்கிறது. பலோடி சத்தா பஜார் கணிப்பின்படி, தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 140 முதல் 143 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 45 முதல் 65 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக 7 - 9 இடங்களைக் கைப்பற்றக்கூடும் என சத்தா பஜார் பெட்டிங்கில் கணித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் திமுக 140 - 143 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்பதே சத்தா பஜார் சூதாட்ட மார்க்கெட் உலகின் பெட்டிங்காக இருக்கிறது. விஜய் தலைமையிலான தவெக 7 - 9 இடங்களில் வெல்லக்கூடும் என்ற சத்தா பஜார் பெட்டிங் கவனம் பெற்றுள்ளது.
-
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்!












Click it and Unblock the Notifications