விமானத்தில் எமெர்ஜென்சி கதவு திறக்கப்பட்டதா? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புது விளக்கம்
சென்னை: கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி யாதவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பயணம் செய்து இருந்தார். இந்த நிலையில், விமானத்தில் அவசர கால கதவை தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை என்று அண்ணாமலை விளக்கம் அளித்து இருக்கிறார்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு கடந்த 10 ஆம் தேதி இண்டிகோ விமான நிறுவனம் புறப்பட இருந்தது. இந்த விமானம் காலை 10.05 மணிக்கு புறப்பட வேண்டியது.
ஆனால் 142 நிமிடங்கள் தாமதமாக அதன்பின் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் இருவர், தென்னிந்தியாவை சேர்ந்த இரண்டு அரசியல் தலைவர்கள், விமானம் எடுக்கும் முன் இதன் கதவுகளை திறந்ததாக சர்ச்சை எழுந்தது. திமுக நிர்வாகிகள் பலர் இது தொடர்பாக இரண்டு தென்னிந்திய அரசியல் தலைவர்கள் மீது புகார்களை வைத்தனர்.

எமர்ஜென்சி டோர்
விமானத்தில் பயணிகள் இருக்கைக்கு இடையே முன் வரிசையில் எமர்ஜென்சி டோர் இருக்கும். விமான பணிப்பெண்கள் விமானத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விளக்கும் போது அவசர கால நேரத்தில் எமஜெர்ன்சி கதவை திறப்பது பற்றியும் விளக்குவார்கள். அந்த வகையில் பணிப்பெண் விளக்கியதும் அந்த விமானத்தில் இருந்த விஐபி ஒருவர் எமர்ஜென்சி கதவை திறந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பயணிகள் கீழே இறக்கப்பட்டு, விமானத்தில் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு, விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

தவறுதலாக கதவை திறந்து விட்டார்
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதையடுத்து விசாரணைக்கு மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்தது பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா. அவர் தவறுதலாக அவசரகால கதவை திறந்து விட்டார்.

சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்
இந்த தகவலை விமானியிடமும், சிப்பந்திகளிடமும் தேஜஸ்வி சூர்யாவே கூறி மன்னிப்பும் கேட்டுக்கொண்டதாக நினைக்கிறேன். உடனடியாக அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகுதான் விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகமும் விசாரணை நடத்தி, நிலைமையை தெளிவுபடுத்தியது" என்று கூறினார்.

தேஜஸ்வி யாதவ் படித்தவர்
இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- தேஜஸ்வி சூர்யா படித்தவர். விமானத்தின் அவசர கதவை திறக்க வேண்டிய அவசரம் அவருக்கு இல்லை. கதவில் இருந்த இடைவெளியை பார்த்தததும் விமானப் பணியாளர்களை அழைத்துக் கூறினார். இதை நானும் பார்த்தேன். அவர் தவறு செய்யவில்லை என்றாலும் அவர் எம்.பி என்ற பொறுப்பில் இருப்பதால் மன்னிப்பு கோரினார்" என்று தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கோரியதாக
கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பயணம் செய்து இருந்தார். இந்த நிலையில், விமானத்தில் அவசர கால கதவை தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை என்று அண்ணாமலை விளக்கம் அளித்து இருக்கிறார். ஏற்கனவே இந்த விவகாரத்தில் தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரியதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறிய நிலையில், அண்ணாமலை மேற்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications