சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இஎம்ஐ கட்டாமல் 6 மாதம் சலுகை பெற்றீர்களா? வட்டியும் அசலும் எவ்வளவு வரும்.. இதை கொஞ்சம் பாருங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: இஎம்ஐ என்று அழைக்கப்படும் கடன் தவணை செலுத்துவதில் இருந்து 6 மாதத்திற்கு நீங்கள் விலக்கு பெற்றிருந்தால். இந்த செய்தியை பாருங்கள். ஏனெனில் இந்த 6 மாத காலத்தில் அசலும் வட்டியும் சேர்த்து நீங்கள் கூடுதலாக எவ்வளவு செலுத்தவேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் வேலை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களின் வசதிக்காக, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ எனப்படும் கடன் தவணையை கட்ட வேண்டாம் என்று அறிவித்தது. அதாவது தள்ளி வைத்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால் மேலும் 3 மாதங்களுக்கு கடன் தவணை தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே இஎம்ஐ கடன் தள்ளிவைப்பின் படி கடனை கட்டாமல் விட்டால் , எதிர்காலத்தில் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருந்தார்கள். ஏனெனில் 6 மாதத்திற்கான கடனை வட்டியுடன் வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டிருந்தன.

வங்கிகளுக்கு லாபம்

வங்கிகளுக்கு லாபம்

வங்கிகளுக்கு மிகப்பெரிய லாபம் தரும் திட்டமாக இஎம்ஐ தள்ளிவைப்பு திட்டத்தை பொருளாதார நிபுணர்கள் பார்க்கிறார்கள். ஏனெனில் இதற்கு சிறய விளக்கத்தை இப்போது பார்ப்போம். ஒருவருக்கு மாதம் இஎம்ஐ என்பது ரூ10,000 ஆக இருக்கும் பட்சத்தில் அவர் 6 மாதம் இஎம்ஐ கட்டாமல் இருந்திருப்பார். அப்படி கட்டாமல் இருந்த தொகை ரூ.60,000 ஆக இருக்கும். இதை அப்படியே கட்ட சொன்னால் தான் வாடிக்கையாளர்களுகு சாதகமாக இருக்கும்,.

உதாரணம் பாருங்கள்

உதாரணம் பாருங்கள்

ஆனால் நிலைமை இப்போது வேறாக உள்ளதது. ஆறு மாதம் இஎம்ஐ கட்டாமல் விட்டால் ஏற்பட்ட ரூ.60,000க்கும் கடன் வாங்கிய அதே சதவீதத்தில் வட்டி வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. உதாரணமாக நீங்கள் 12 சதவீதத்தில் வாங்கிய கடனை அசலும் வட்டியும் என அதை 10000 வீதம் 36 மாதங்களில் திருப்பி செலுத்துவதாக ஒப்பந்தம் போட்டிருப்பதாக வைத்து கொள்வோம். இதில் 24 மாதங்கள் இஎம்ஐ கட்டி விட்டீர்கள் என்றால் 12 மாதங்களே செலுத்த வேண்டிய நிலை இருந்திருக்கும்.

7200 கட்ட வேண்டியது வரும்

7200 கட்ட வேண்டியது வரும்

ஆனால் நீங்கள் 6 மாத இஎம்ஐ சலுகை வாங்கி இருந்தால், 6 மாத தவணை தொகையான ரூ.60,000க்கு , 12 சதவீத வட்டியுடன் கணக்கிட்டால் ஒரு ஆண்டுக்கு ரூ.7200 கூடுதல் வட்டி கட்ட வேண்டியதிருக்கும். அதாவது மீதமுள்ள தவணை மாதங்களான 12 உடன், 6 மாதம் கட்டமால் விட்ட 60000 ரூபாயை பெருக்கி, அதை 12 சதவீத வட்டியுடன் கணக்கிட்டால் ரூ.7200ஐ கூடுதலாக கட்ட வேண்டியது வரும். (எப்படி கணக்கிடுவது : மீதமுள்ள இஎம்ஐ மாதங்கள் x 6மாதம் கட்டாமல் விட்ட இஎம்ஐ தொகை x வட்டி சதவீதம் = மீதமுள்ள மாதங்களுக்கு கட்ட வேண்டிய வட்டி தொகை)

மொரோட்டோரியம் வட்டி

மொரோட்டோரியம் வட்டி

அதாவது கட்டாமல் விட்ட 60000 கடன் தொகையுடன் மொரோட்டோரியம் வட்டியான 7200ஐ சேர்த்து 67200ஐ நீங்கள் செலுத்த வேண்டியது வரும். நீங்கள் ஆறு மாத தவணையை 7 மாதமாக மாற்றிக்கொள்ளலாம். 7200ஐ 12 மாதத்தில் பிரித்துக் கட்டிக் கொள்ளலாம் என வங்கிகள் ஆப்சன் வழங்க வாய்ப்பு உள்ளது. இந்த தவணை வங்கிகளில் நீங்கள் வாங்கிய கடன், வைத்துள்ள இஎம்ஐ, கட்டாமல் விட்ட இஎம்ஐ ஆகியவற்றை பொருத்து மாறுபடும்.

English summary
EMI moratorium : if you are missing EMIs early on in the loan schedule, a bigger amount of unpaid interest gets added to the loan. Even a single missed payment early in the loan tenure compounds into a big liability with time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X