வில்லங்கச் சான்றிதழ் அவசியம்.. வில்லங்கத்தில் வில்லங்கம்? பதிவுத்துறை டீடெயில்ஸ் குட்நியூஸ் விரைவில்
சென்னை: குறிப்பிட்ட சொத்து யார் பெயரில் இருக்கிறது? இதற்கு முன்பு யார் யார் கைகளில் சொத்து மாறியது போன்றவற்றை காட்டும் ஆவணம்தான் வில்லங்க சான்றிதழ்.. இந்த ஈ.சி.யை ஆன்லைனிலும் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல, தமிழகத்தில் நிலம், வீடு வாங்குவோர், அதற்கான பத்திரங்களை சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்து, சொத்தின் சர்வே எண், பதிவான பத்திரத்தின் எண், வருடம், மதிப்பு, கொடுத்தவர், வாங்கியவர் பெயர் உள்ளிட்ட விபரங்களை பெறுகிறார்கள்.. எனினும், அது தொடர்பான முக்கிய கோரிக்கையை பொதுமக்கள் விடுத்து வந்த நிலையில், அதை பற்றின குட்நியூஸ் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
வில்லங்க சான்றிதழ் (Encumbarance Certificate - EC), ஒரு சொத்துக்கு யார் உரிமை உள்ளவர் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சான்றாகும்.. ஒரு சொத்து யாருடைய கைகளில் இருந்து எப்படி மாறி வந்துள்ளது? சொத்து உரிமை யாருக்கு மாற்றப்பட்டது? போன்ற விவரங்களை அறிந்துகொள்ளும் ஆவணமாகும்.

வில்லங்க சான்றிதழ் அவசியம்
சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரங்கள், சொத்தின் மதிப்பு, சொத்தை தந்தவர், எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட வருடம், மற்றும் பதிவு எண் மட்டுமல்லாமல், அந்த சொத்தை அடமானம் வைத்து ஏதாவது கடன் வாங்கியிருந்தால்கூட, அனைத்தையும் வில்லங்க சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ளலாம்..
சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதி தந்திருந்தாலும், அதையும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
அந்தவகையில், சொத்து வாங்குவோர், முந்தைய பத்திரப்பதிவு விபரங்களை சரி பார்க்க குறிப்பிட்ட வருடங்களுக்கு வில்லங்க சான்றிதழை பெறுகிறார்கள்.. அதாவது, கட்டணம் செலுத்தி, ஆன்லைனில் வில்லங்க சான்றிதழ் பிரதி பெறப்படுகிறது.. மேலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான வில்லங்க சான்று விபரங்களை, பதிவுத்துறை இணையதளத்தில் இலவசமாக பார்க்கும் வசதியும் நடைமுறையில் உள்ளது.
தமிழக பதிவுத்துறை
எனினும், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகம், பதிவுத்துறையின் எந்த மண்டலத்தில், எந்த பதிவு மாவட்டத்துக்குள் வருகிறது என்ற விபரம் இடம் பெறுவதில்லை... முக்கியமாக, வெளியூர்களில் இருந்து வந்து சொத்து வாங்கும் நிலையில், இந்த விபரங்கள் இல்லாதது, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதாக விண்ணப்பதாரர்கள் கூறுகிறார்கள்.
எனவே, வில்லங்க சான்றிதழில், மண்டலம், மாவட்டம் போன்ற விபரங்களை சேர்த்தால், பயனுள்ளதாக இருக்கும் என்று பதிவுத்துறைக்கு தொடர்ந்து வேண்டுகோளும் விடுத்தவண்ணம் உள்ளனர்.. பொதுமக்களின் இந்த கோரிக்கையை பதிவுத்துறை நிறைவேற்ற போகிறதாம்..
ஸ்டார் 3.0 சாப்ட்வேர்
வில்லங்க சான்றிதழில், சார் - பதிவாளர் அலுவலக பெயர் மட்டும் இருந்தால்போதும் என்ற அடிப்படையில் தற்போதைய நடைமுறை அமைந்துள்ள நிலையில், வில்லங்க சான்றிதழ் தொகுத்து வழங்கும் சாப்ட்வேரில், இதற்கான வசதி செய்யப்படவில்லையாம்.. எனவே, புதிதாக உருவாக்கப்படும், ஸ்டார் 3.0 சாப்ட்வேரில் உரிய வசதிகள் ஏற்படுத்த, பணிகள் நடந்து வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாப்ட்வேர் பணி முடிவடைந்ததுமே, பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறிவிடும் என்றும், வில்லங்க சான்றிதழில், மண்டலம், மாவட்டம் போன்ற விபரங்களும் சேர்க்கப்பட்டுவிடும் என்று உறுதி தரப்பட்டுள்ளது.
பெயிரா விடுத்த கோரிக்கை
சமீபத்தில், பெயிரா எனப்படும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு, பதிவுத்துறைக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தது..
அதில், "வில்லங்க சான்றிதழில் நடைபெற்ற சொத்து பரிமாற்றம் சம்பந்தமான விபரங்கள் மட்டுமல்லாமல், கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்ட காலம் முதல் தற்போது வரையுள்ள குறிப்பிட்ட சொத்து சம்பந்தப்பட்ட பரிமாற்றங்கள் அனைத்தும் இடம் பெறும் வகையில் வழிவகை செய்திட வேண்டும்" என்று பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கேட்டுக் கொண்டிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications