ஸ்பாட்டில் அதிமுக திமுக நிற்கும்போது விஜய் எங்கே? அம்மியே பறக்குது SIRக்கு! கேஸ் பலூன் தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவில் சிறிதும் நன்றியுணர்ச்சியே இல்லை.. அதிமுகவுக்கு நன்றி தெரிவித்து, முதல் தீர்மானமாக நிறைவேற்றியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் விஜய் பேசும்போது, அதிமுகவுக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டும். அப்படி சொல்லிவிட்டு, திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என்று விஜய் பேசியிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லையே? என்று பத்திரிகையாளர் மணி விமர்சித்துள்ளார்.

South Beat என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "கரூர் சம்பவம் பொதுவெளியில் நடந்த நிலையில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை ரிசார்ட்டில் தான் பார்த்து பேசியிருக்கிறார் விஜய்..

SIR dmk aiadmk

சம்பவம் பொதுவெளியில் நடந்தால் அதுகுறித்த விளக்கமோ, பாவ மன்னிப்போ எதுவாக இருந்தாலும், அதுவும் பொதுவெளியில்தான் நடக்க வேண்டும்.. ரிசார்ட்டில் நடந்த சந்திப்பு குறித்து, தவெகவில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவுமே வெளிவரவில்லை..

எடப்பாடி பழனிசாமி

கரூரில் தான் செய்தது தவறு என்று இப்போதுவரை விஜய் ஏற்றுக்கொள்ளவில்லை.. மாமல்லபுரம் சென்று வந்தவர்களும், விஜய் அழுதார், காலில் விழுந்தார் என்றெல்லாம் சொல்கிறார்கள்.. உண்மையிலேயே விஜய் அவர்களிடம் வருத்தம் தெரிவித்திருந்தால், அதை ஏன் அதிகாரப்பூர்வமான அறிக்கையாக வெளியிட மறுக்கிறார்கள்? மொத்தத்தில் ஒருதலைப்பட்சமாகவே இதுகுறித்த செய்திகள் வெளியாகின.

அதேபோல சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், கரூரில் இறந்தவர்களின் போட்டோக்களை வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கலாம்..

கரூர் விவகாரத்தின்போது, சட்டப்பேரவையில் விஜய்க்காக பேசியது முன்னாள் முதலமைச்சர், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே..

உங்கள் கட்சிக்காக கூட இவ்வளவு பேசாமல், மாற்று கட்சிக்காக ஏன் வக்காலத்து வாங்குகிறீர்? என்று முதலமைச்சர் ஸ்டாலினும் எடப்பாடியிடம் அப்போது கேட்டிருந்தார்.

நன்றியுணர்ச்சி இல்லாத தவெக

ஆனால், தவெகவில் நன்றியுணர்ச்சியே இல்லை.. அதிமுகவுக்கு நன்றி தெரிவித்து, முதல் தீர்மானமாக நிறைவேற்றியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் விஜய் பேசும்போது, அதிமுகவுக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டும். அப்படி சொல்லிவிட்டு, திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என்று விஜய் பேசியிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.

ஆக, கரூர சம்பவத்துக்கு மன்னிப்பும் கேட்க மாட்டார், பொறுப்பும் ஏற்க மாட்டார்.. வரிந்து கட்டி பேசிய அதிமுகவுக்கும் நன்றி சொல்ல மாட்டார்.. இதுக்கு பேர்தான் தற்குறித்தனமான அரசியல், இதுதான் சுயநல அரசியல்,.

அற்ப சந்தோஷம்

தவெகவின் அரசியல் என்ன? ஆதவ் அர்ஜூனா பேச்சின் அரசியல் என்ன? கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஸ்டாலின் ஓடினாரா? ஒளிந்தாரா? என்பது இப்போது ரொம்ப முக்கியமா? அதன்மூலம் தவெக என்ன சொல்ல வருகிறது? எங்கே பேசினாலும், 60 வருடம் முன்பு செத்து போன நேருவையே இழுத்து வந்து மோடி பேசிக் கொண்டிருக்கிறாரே, அதுபோலத்தான் தவெகவின் அரசியல்.

திமுகவை எதிர்த்து ஆதவ் பேசும் வீடியோ, ஆதவை எதிர்த்து திமுகவினர் பேசும் வீடியோ என மாறி மாறி சோஷியல் மீடியாவில் வெளிவந்தாலும், இதன் ஆக்கப்பூர்வ பலன் என்ன? இதெல்லாம் அற்ப சந்தோஷம்தான்.. அரிப்பை சொரிந்து கொள்ளலாமே தவிர, அதனால் களப்பயன் என்ன?

SIR = அம்மியும் அசையுதே

முதலில் தவெக கவலைப்பட வேண்டியது SIR பற்றிதான்.. ZenG வகையறாக்கள்தான் தவெகவுக்கு ஓட்டுப்போட போகிறார்கள் என்றால், அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலிலேயே கிடையாது.. SIR-ல் கொத்து கொத்தாக தூக்க போறாங்க.. ஆடி காத்தில் அம்மியே அசையும் என்பதுபோல அதிமுக, திமுகவே தலையில் கை வைத்து கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்..

SIR எதிர்த்து திமுக சுப்ரீம்கோர்ட் போனால், நாங்கள் ஆதரித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம் என்று முன்னாள் அமைசசர் ஜெயக்குமார் சவடால் விட்டார்.. ஆனால் இன்று சுப்ரீம் கோர்ட்டில், பாதிப்பு வராமல் SIR நடத்த வேண்டும் என்று அதிமுகவில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.. இதைத்தானே திமுகவும் சொல்லுது?

கேஸ் பலூன்

இதில் அதிகம் கவலைப்பட வேண்டியது விஜய் கட்சிதான்.. அந்த கட்சியில் வாக்காளர்களில் 70 சதவீதம் சின்ன பிள்ளைகள்.. அவர்கள் 18+ இருக்கும்போது, வாக்காளர் படடியலில் அவர்களது பெயரே இல்லையே?

அதிமுக, திமுக பிரதிநிதிகள் என இரு தரப்பினருமே பிஎல்ஓக்களுடன் ஒன்றாக உட்கார்நது ஸ்பாட்டுக்கே சென்று வாக்காளர் பட்டியல் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.. ஆனால் தவெகவில் யாரையுமே காணோமே? திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என்பதெல்லாம் அர்த்தமில்லாதது.. கேஸ் பலூன் என்பார்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+