எருமை மாடு கூடத்தான் கறுப்பா இருக்கு... அப்போ அது திராவிடனா? - யுவனை கேட்கும் சீமான்
கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அது குறித்து கருத்து கூறியுள்ள சீமான், தம்பி முதலில் குழப்ப வேண்டாம் என்று கூறினார்.
சென்னை: நீ திராவிடனா? தமிழனா? என்று யுவன் சங்கர் ராஜவை சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். யுவன்சங்கர் ராஜா கூறுவது சிறுபிள்ளைதனமாக உள்ளது என்று கூறிய சீமான், எருமை மாடு கூடத்தான் கறுப்பாக உள்ளது அது திராவிடனா என்று கேட்டுள்ளார்.
அம்பேத்கார் அன்ட் மோடி என்கிற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில், "பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்று இளையராஜா கூறியுள்ளார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.
இளையராஜாவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகியுள்ளது. இளையராஜாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா
நேற்றைய தினம் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா கருப்பு நிற உடை அணிந்து, கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்' என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவு பலராலும் பகிரப்பட்டது. அண்ணாமலை கூட நானும் கருப்பு தமிழன்தான் என்று கூறியிருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் பதிவு பற்றி கருத்து கூறியுள்ள சீமான், தம்பி முதலில் குழப்ப வேண்டாம் என்று கூறினார்.

ஏன் இந்த குழப்பம்
இரண்டு அடையாளம் தேவையில்லை என்று கூறிய சீமான், நீ தமிழனாக இரு அல்லது திராவிடனாக இரு என்று சொன்னார். திராவிடன், தமிழன் ஏன் பல முகமூடிகளை அணிய வேண்டும் என்று கேட்டார் சீமான். எச்.ராஜா கூட மோடியை திராவிடன் என்று சொல்கிறார். முதலில் இந்தியன், பிறகு திராவிடன், அப்புறம் தமிழன், பிறகு எந்த சாதி என்று கேட்பார்கள் என்று கூறினார்.

எது திராவிடம் யார் திராவிடர்
தேவைப்பட்டால் இந்தியன் என்கிறார்கள், தேவைப்பட்டால் திராவிடன், தேவைப்பட்டால் தமிழன் என்று சொல்கிறீர்கள் என்றார். குழம்பாமல் பெருமைக்குறிய தமிழன் என்று சொல்லுங்கள் கேஜிஎப் பட ஹீரோ யாஷ் தான் பெருமைக்குரிய கன்னடன் என்றுதான் சொல்கிறார். அதே போல பெருமைக்குரிய தமிழன் என்று சொல்ல வேண்டியதுதானே.

விமர்சிக்க வேண்டாம்
யுவன் சின்னப்பிள்ளை அதை விட்டு விடுவோம் எல்லாவற்றையும் விமர்சிக்க வேண்டும் என்று நினைத்தால் அதுவே நோயாகிவிடும் என்று சொன்னார் சீமான். தொடர்ச்சியாக எதையாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து சொன்னால் அது நோயாகிவிடும். அது அவருடைய கருத்து.

எருமை மாடு கூட கருப்புதான்
கருப்பா இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்களா? தென் ஆப்ரிக்காவில் கூட கருப்பாகத்தான் இருக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தின் நிறம் கருப்பு. உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் தோலின் நிறம் மினுமினுப்பாக இருக்கும் என்று சொன்ன சீமான் எருமை மாடு கூட கருப்பாகத்தான் இருக்கிறது அப்போ அது திராவிடனா என்று கேள்வி எழுப்பினார் சீமான். கருப்பு என்றாலே திராவிடன் அல்ல தமிழர்கள் கருப்பாக இருக்கக் கூடாதா என்று கேட்டார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications