அடுத்த 2 மாதங்கள் ரொம்ப முக்கியம்.. முகக் கவசம் கட்டாயம்.. சென்னை கமிஷனர் சொன்ன முக்கிய தகவல்
சென்னை: அனைவருக்கும் தடுப்பூசி போடும் வரை இன்னும் இரண்டு மாதங்களுக்கு அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வசதியாக மார்க்கெட் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகவும், தற்போது முக்கிய கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, இதுவரை 2லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு போடப்பட்டுள்ளதாக கூறினார்.

கோயம்பேடு தடுப்பூசி
தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வருகிறதாக கூறிய அவர், அந்த வகையில் 15- ஆயிரம் பேர் வரை பணியாற்ற கூடிய கோயம்பேடு வணிக பகுதியில் 10 நாட்களில் தடுப்பூசி போட திட்டமிட்டு இன்று இங்கு மையம் திறக்கப்பட்டுள்ளது என்றார். இங்கு இருப்பவர்களில் பெரும்பாலோனர் 45 வயதிற்கு மேற்பட்டோர் தான் ஆகையால் 10 முதல் 15 நாட்களில் இங்கு தடுப்பூசி போட்டு முடிக்க அறிவுறுத்தி உள்ளோம்.

50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
எங்களின் இலக்கு ஒரு நாளுக்கு 50ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவது, தற்போது 20ஆயிரம் என்ற அளவில் உள்ளது, இது விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்ற அவர் சுய உதவி குழுக்களில் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தி வருகிறோம் என்றார்.

2 மாதங்கள் முகக் கவசம்
கொரோனோ தடுப்போ நடவடிக்கைகளும், பரிசோதனைகளும் இன்றும் எந்த வித சுணக்கமும் இன்றி நடந்து வருகிறதாக கூறிய அவர் இரண்டு முறை தடுப்பூசி போட்டு கொண்டாலும் அனைவரும் தடுப்பூசி போடும் வரையிலும் இறுதி நாளை நெருங்கும் வரை முக கவசம் உள்ளிட்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார். இன்னும் இரண்டு மாதங்களுக்கு கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்ற அவர் மத்தியில் இருக்க கூடிய மண்டலங்களில் கூட்ட நெருக்கடி இருப்பதால் அங்கு சற்று அதிகரித்து உள்ளது, அச்சம் வேண்டாம் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

ஸ்விக்கி ஊழியர்கள்
ஸ்விக்கி, சோமேட்டோ போன்றவர்களும் முன்கள பணியார்களாக தான் உள்ளனர், அவர்களுக்கு தடுப்பூசி போட அவர்கள் நிறுவனத்தை அழைத்து அறிவுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். முக கவசத்திற்கான விதிகளை தற்போது மீண்டும் கடுமையாக்கி உள்ளதாக கூறிய அவர் தேர்தல் நேரம் என்பதாலும், அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வரையிலும்
இந்த இரண்டு மாதம் கடினமான மாதங்கள், ஆகையால் அனைவரும் அறிவுறுத்தல்களை கடைபிடித்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications