Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரக்கோணம் ஜொலிக்குது.. பெரம்பூர் பூரிக்குது.. திருவள்ளூர் துள்ளுது.. காரணம் என்னனு பாருங்க.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 18 ரயில்நிலையங்கள், கிட்டத்தட்ட விமான நிலையம் போன்ற தோற்றத்தை பெறப்போகிறதாம்.. ஆம்.. அப்படியொரு முன்னெடுப்பைதான், ரயில்வே நிர்வாகம் தற்சமயம் மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்த, அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை, ரூ.24,470 கோடியில் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை அதாவது ஆகஸ்ட் 6ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

Excellent announcement and Rs17 crore renovation in 25 Railway Stations including Chennai Perambur

பிரதமர் மோடி: அந்தவகையில், அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் உட்பட 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். பெரம்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட தெற்கு ரெயில்வேயில் 25 ரெயில்நிலையங்களை உலகத்தரத்திலான வசதிகளுடன் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.
தமிழகத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அதன் விவரங்கள் குறித்து அதிகாரிகள் சொன்ன பல்வேறு தகவல்கள் இவைதான்:

வடசென்னை: "வடசென்னை பகுதியில் முக்கிய ரெயில் நிலையமாக விளங்கும் பெரம்பூர் ரெயில் நிலையம் புதிய ரெயில்வே திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெறப் போகிறது.

பெரம்பூர் ரெயில் நிலையத்தில் புதிய முகப்புடன் கூடிய ரெயில் நிலையம் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் பெரம்பூர் ரெயில் நிலையத்தின் முகம் அப்படியே முழுமையாக மாறப் போகிறது. பழைய கட்டிடத்தை புதுப்பித்து அங்கும் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கூடுதல் நடைமேடைகளும் அமைக்கப்படுகிறது.

பெரம்பூர்: பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இப்போதுள்ள டிக்கெட் முன்பதிவு அலுவலகம் போதுமான இடவசதியுடன் இல்லை. அதனால், வடசென்னை பகுதியில் வசிப்பவர்களும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இந்த ரெயில் நிலையத்தை அதிகம் பயன்படுத்தி முன்பதிவு செய்து வருகிறார்கள். அவர்களின் வசதிக்காகவே, புதிய முன்பதிவு அலுவலகத்தை நவீன வசதிகளுடன் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பெரம்பூர் ரெயில் நிலையத்தில் தற்போதுள்ள பார்க்கிங் வசதியை விரிவுபடுத்தி கூடுதலாக அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது...

திருவள்ளூர் : அதேபோல, நடைமேம்பாலம் ஒன்றை புதிதாக கட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது. ரூ.28.4 கோடியில் சீரமைக்கப்பட உள்ள திருவள்ளூர் ரெயில் நிலையத்தில், புதிய முகப்பு தோற்றத்துடன் கட்டிடம் வடிவமைக்கப்பட உள்ளது.. இங்கும் புதிய நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் ரூ.37.76 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அங்குள்ள 2 நுழைவு வாயில்களிலும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. அத்துடன், பயணிகளின் வசதிக்காக ஸ்கைவாக் வசதியும் செய்யப்பட உள்ளது.. செங்கல்பட்டு ரெயில் நிலையம் ரூ.22.14 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதால், பெரிய வணிக வளாகங்களின் முன்பு இருப்பது போன்று முன்பகுதியை மால் முகப்புடன் அமைப்பதற்கு ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Excellent announcement and Rs17 crore renovation in 25 Railway Stations including Chennai Perambur

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் ரூ.47 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ளதால், புதிய ரெயில் நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டு பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளன. திருத்தணி ரெயில் நிலையத்தில் ரூ.19.26 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் நுழைவு வாயில் கட்டிடங்களும் புதிதாக கட்டப்பட உள்ளன.

பெருத்த நம்பிக்கை: மேற்கண்ட ரயில்நிலையங்கள் அனைத்திலுமே, பயணிகளுக்கு தேவையான ஓய்வு அறை, நடைபாதைகள் சீரமைப்பு நடக்க போகிறது.. அத்துடன், நடை மேம்பாலம், ஸ்கைவாக் உள்ளிட்ட வசதிகளும் கொண்டுவரப்படுகிறது. இந்த திட்டப்பணிகள் அனைத்துமே, வரும் பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடைந்து பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று ரெயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+