சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: மாநிலங்களுக்கு எதற்கு ஆளுநர்? ஜனாதிபதியே போதும்! அப்துல்லா எம்.பி. அதிரடி சிறப்பு பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பு மற்றும் அழுத்தங்களுக்கு பிறகு ஆளுநர் ரவி இந்த மசோதாவை டெல்லிக்கு அனுப்பி உள்ளார். இந்த மசோதா டெல்லிக்கு அனுப்பப்பட்டுவிட்டாலும் இன்னும் ஆளுநர் ரவி - தமிழ்நாடு அரசு இடையிலான மோதல் முடிவிற்கு வரவில்லை.

Recommended Video

    Governor மீது DMK-வுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | DMK MP MM Abdullah Interview | Oneindia Tamil

    துணை வேந்தர் நியமனம் தொடங்கி இன்னும் பல விஷயங்களில் இரண்டு தரப்பிற்கும் கடும் மோதல் நிலவி வருகிறது. ஆளுநர் ரவி - தமிழ்நாடு அரசு இடையிலான இந்த மோதல் குறித்து திமுக எம்எம் அப்துல்லா பேட்டி அளித்தார். ஒன்இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில் பேசிய விஷயங்கள் பின்வருமாறு.

     ஓராண்டை நிறைவு செய்த திமுக அரசு.. முதல்வர் & அமைச்சர்களை வாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி ஓராண்டை நிறைவு செய்த திமுக அரசு.. முதல்வர் & அமைச்சர்களை வாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி

    நீளும் மோதல்

    நீளும் மோதல்

    கேள்வி: ஆளுநர் vs தமிழ்நாடு அரசு என்று மோதலை திமுகவே முன் வைக்கிறதா?

    பதில்: கவர்னரை வைக்கும் கேள்விகளை திமுகதான் முதல்முதலில் வைக்கிறது என்றால், நாங்கள்தான் மோதலை உருவாக்குகிறோம் என்று சொல்லலாம். ஆளுநரின் செயலுக்கு நாங்கள் எதிர்வினை மட்டுமே ஆற்றுகிறோம். கவர்னர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் கிடையாது. அவர் நமக்கு தேவையும் இல்லை. ஆளுநர் சொன்னது போல ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவை இல்லை. அவர் செய்வது ஒரு கங்காணி வேலை. பிரிட்டிஷ் காலத்தில் ஒரு கங்காணி ஆள் தேவைப்பட்டார். அதனால் அப்போது வைத்தனர். மேலே மாநில அரசு இருக்கிறது. இங்கே மாநில அரசு உள்ளது. இங்கிருந்து தொடர்பு கொள்ள மாநில பிரதிநிதிகள் உள்ளனர். இது போக மாநிலத்திலிருந்து எம்பிக்கள், அமைச்சர்கள் இருக்கிறார்கள்.. இப்படி இருக்க ஆளுநர் பதவி ஏன்? இது என்ன மிரட்டலா? பிரிட்டிஷ் காலத்தில் பல presidency இருந்தது.. அதனால் கவர்னர் போட்டார்கள் இப்போது ஏன்? இது ஜனநாயக நாடு.. பிரிட்டிஷார் ஆளும் நாடு அல்ல.

    கேள்வி: ரோசய்யா மாதிரி ஆளுநருக்கு வராத எதிர்ப்பு ரவிக்கு அதிகம் வருகிறதா?

    பதில்: ரோசய்யா இருந்தார்.. ரோசய்யாவை தேசிய கட்சிதான் ஆளுநராக்கியது. அவர் முதல்வராக இருந்தவர். அவருக்கு முதல்வர்களின் கஷ்டங்கள் தெரியும். நிர்வாகத்தில் அவர் தலையிடவில்லை. சட்டத்திற்கு புறம்பாக நடக்கவில்லை. ஆனால் ஆளுநர் ரவி அப்படி செய்யவில்லை. அவர் அதிகார வரம்பிற்கு மீறி செயல்படுகிறார்.

    ஆளுநர் நல்லவர் இல்லை

    ஆளுநர் நல்லவர் இல்லை

    கேள்வி: திமுவிற்கு சப்போர்ட் செய்யும் ஆளுநர்தான் நல்ல ஆளுநரா?

    பதில்: திமுக பற்றி நான் பேசவில்லை. மாநில உரிமைகளில், முடிவுகளில் தலையிடாத ஆளுநர்தான் நல்ல ஆளுநர் என்கிறார். மாநில அரசுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். அது யாருடைய ஆட்சியாக இருந்தாலும் சரி.

    கேள்வி: அப்படி என்றால் ஆளுநர் ரவி நல்ல ஆளுநர் இல்லையா?

    பதில்: ஆம். அவர் நல்ல ஆளுநர் இல்லை.

    கேள்வி: 7 தமிழர் விடுதலை தொடங்கி அனைத்திலும் ஆளுநர் - முதல்வர் நிலைப்பாடு, பேச்சுக்கள் வேறு வேறாக இருக்கிறதே?

    பதில்: தமிழ்நாடு அரசு உண்மையை பேசுகிறது. ஆளுநர் அவரின் விருப்பத்தை பேசுகிறார். உதாரணமாக நீட் விவகாரத்தில் நாங்கள் முடிவு எடுத்துவிட்டோம். நீங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்புங்கள் என்று கூறுகிறோம். அது உண்மை. ஆனால் ஆளுநர் அதில் குறி போட்டு அனுப்புவேன். என்று மேலதிகாரி போல பேசுகிறார். அவர் மேலதிகாரி இல்லை. அதுதான் தவறு.

    இரட்டை ஆட்சி இமேஜ்

    இரட்டை ஆட்சி இமேஜ்

    கேள்வி: தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மற்றும் ஆளுநரின் தனிப்பட்ட நிர்வாகம் என்ற இரண்டு ஆட்சி நடக்கும் இமேஜ் இருக்கிறதே?

    பதில்: இது சரியா தவறா என்று ஆளுநர்தான் உணர வேண்டும். ஆளுநர் பதவியே வேண்டாம் என்றுதான் நாங்கள் கூற வேண்டும். இரண்டு ஆட்சி நடக்கும் இமேஜ் இல்லை. ஆனால் ஆட்சிக்கு ஆளுநர் தொந்தரவு செய்கிறார் என்ற இமேஜ்தான் இருக்கிறது?

    கேள்வி: ஜெயலலிதா போல இதை வீரியத்தோடு திடமாக எதிர்கொள்ளும் பலம் திமுகவிற்கு இல்லை என்று சொல்லாமா?

    பதில்: என்ன செய்ய சொல்கிறீர்கள்.. ஜெயலலிதா போல ஆசிட் அடிக்க வேண்டுமா..அந்த அம்மா மாதிரி யார் மீதாவது மகளிர் அணியை வைத்து படம் காட்டுவது போல செய்ய வேண்டுமா? சென்னா ரெட்டியை என்ன செய்தார்கள் தெரியுமா? அதை எல்லாம் சொல்லிக்காட்ட வேண்டுமா? அந்த அசிங்கத்தை எல்லாம் சொல்லிக்காட்ட வேண்டுமா? திமுக சட்டப்படிதான் நடக்கும். சட்டப்படி நாங்கள் செயல்படுவோம். அந்த அம்மா செய்த மாதிரி நீங்கள் ஏன் செய்யவில்லை என்று கேட்டால்.. அவர் போல எல்லாம் செய்ய முடியாது சார்.

    ஆளுநர் வேண்டாமா

    கேள்வி: ஆளுநர் வேண்டாம் என்றால் அதற்கு மாற்று என்ன என்று சொல்வீர்கள் சார்?

    பதில்: ஆளுநர் இல்லாமலே ஆட்சி நடத்த முடியும். குடியரசுத் தலைவர் இருக்கும் போது ஏன் ஆளுநர். ஒன்றிய அரசு கலையும் போது குடியரசுத் தலைவர் தேவை. ஒரு நாட்டையே ஒன்றிய அரசு இல்லாத போது குடியரசுத் தலைவர் கவனிக்க முடியும் போது. அவரால் மாநிலத்தை கவனிக்க முடியாதா? இதற்கு ஆளுநர் தேவையா? தலைமை செயலாளர் தொடங்கி பல அதிகாரிகள் இருக்கிறார்களே? முதல்வரின் ஆட்சி கலைந்தால் இந்த அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பேச்சை கேட்டு நடப்பார்கள். ஏன் ஆளுநர் இதற்கு? என்று திமுக எம்எம் அப்துல்லா பேட்டி அளித்துள்ளார்.

    முழு பேட்டியை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!

    English summary
    EXCLUSIVE interview of DMK MP Abdullah on TN govt relationship with Governor Ravi and other pressing issues. ஒன்இந்தியா தமிழுக்கு திமுக எம்பி அப்துல்லா அளித்த சிறப்பு பேட்டி.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X