"கவலைக்கிடம்".. ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கையில் உச்சபட்ச சிக்கலாமே! வார்னிங் தரும் "எக்ஸ்பர்ட்".. ஆஹா
ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு இடையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து எடப்பாடி, ஓபிஎஸ் காத்துகொண்டு இருக்கின்றனர். தேர்தல் நேரத்தில் ஒரு வழக்கறிஞர் போய் கேட்டால் தீர்ப்பு வழங்கபடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன, என்று மூ
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தற்போது வரை நிலவரம் எடப்பாடிக்குதான் சாதகமாக இருக்கிறது, இதனால் ஓபிஎஸ் தரப்பின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் வாதம், ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து வாதம், எடப்பாடி பழனிசாமி வாதம், அதிமுகவின் பொது வாதம், அவைத்தலைவர் தமிழ் மகன் வாதம் என்று வரிசையாக கட்சியின் வாதங்கள் எல்லாம் முடிவிற்கு வந்துள்ளன. இதையடுத்து அதிமுக பொதுக்குழு வழக்கில் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. இந்த பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் மேல்முறையீடு வழக்கு ஆகும். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன.
அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு இடையில் இந்த வழக்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இரட்டை இலை சின்னம் முடங்காமல் இருக்க இந்த வழக்கில் தெளிவான ஒரு தீர்ப்பு வர வேண்டும். இந்த நிலையில்தான் அதிமுக பொதுக்குழு வழக்கிலும், அதிமுகவில் என்ன நடக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு இடையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து எடப்பாடி, ஓபிஎஸ் காத்துகொண்டு இருக்கின்றனர். தேர்தல் நேரத்தில் தீர்ப்பு வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில் ஏதாவது ஒரு வழக்கறிஞர் போய் கேட்டால் தீர்ப்பு வழங்கபடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. தீர்ப்பில் பொதுக்குழு நடந்தது செல்லும், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டால், அது எடப்பாடிக்கு சாதகமாக அமையும். பொதுக்குழு செல்லாது, ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லாது என்றால், ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக முடியும். என்ன நடக்கிறது என்று தெரியாது.

நிலவரம்
தற்போது வரை நிலவரம் எடப்பாடிக்குதான் சாதகமாக இருக்கிறது. ஒருவேளை தீர்ப்பு வர தாமதம் ஆனாலோ அல்லது சிவில் கோர்ட்டுக்கு செல்லுங்கள் என்று கோர்ட் சொல்லிவிட்டாலோ சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். கோர்ட்டில் வழக்கு இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் யாருக்கும் சின்னம் தராது. இரண்டு பேரும் போட்டியிடும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் சின்னத்தை யாருக்கும் கொடுக்காமல் முடக்கவே வாய்ப்பு உள்ளது. இதுதான் ,எதிர்பார்க்க கூடிய நிலைமையாக உள்ளது. கோர்ட் முடிவிற்காக எடப்பாடி காத்திருக்க மாட்டார்.

வேட்பாளர் எடப்பாடி
அதனால் நாளை அல்லது நாளை மறுநாள் எடப்பாடி வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதிமுகவில் இரண்டு குழு இருப்பதால் வேட்பாளரை தேர்வு செய்வதில் தாமதம் ஆகிறது. ஜனவரி 31 தொடங்கி பிப்ரவரி 7ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய காலம் இருக்கிறது. அதனால் அதற்குள் அறிவித்துவிடுவார்கள். தற்போது வலிமையான எதிர்க்கட்சி அதிமுகதான். மற்ற கட்சிகள் திமுகவை எதிர்க்க முடியாது. இதை அண்ணாமலையே ஒப்புக்கொண்டு உள்ளார். அதனால் எடப்பாடி வேட்பாளரை அறிவித்ததும் தேர்தல் களம் சூடு பிடிக்கும்.

பாஜக போட்டி
இந்த தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்று அண்ணாமலை ஆசைப்பட்டு இருக்கலாம். ஆனால் மத்திய தலைமை அதற்கு ஒப்புதல் அளித்து இருக்காது என்று கருதுகிறேன். இப்போது எடப்பாடி அணியா? ஓபிஎஸ் அணி யாரை ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது. இரண்டு பேரில் யாரை ஆதரிப்பது என்ற நிலை பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது. அப்படி இல்லை என்றால் நீங்கள் இரண்டு பேரும் பிரிந்து உள்ளீர்கள். அதனால் உங்களை ஆதரிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை பாஜக எடுக்க வேண்டும்.

வாய்ப்பு குறைவு
இல்லையென்றால் வேட்பாளரை நிறுத்த வேண்டும். ஆனால் பாஜக வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு குறைவு. எனவே பாஜக விரைவில் யாரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கும். டெல்லியில் இருக்கும் பாஜக தன்னை ஆதரிப்பது போல ஓபிஎஸ் காட்டிக்கொள்கிறார். இவரே வழிந்து போய் பாஜக தலைவர்களை சந்திக்கிறார். வழிந்து போய் பாஜகவை ஆதரிக்கிறார். அதனால் தனக்கு பாஜக ஆதரவு இருப்பது போல காட்டிக்கொள்கிறார். ஆனால் பாஜக இவரை மீண்டும் ஆதரிக்குமா என்பது சந்தேகம்தான். ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்தால் பாஜகவிற்குத்தான் சிக்கல்.

யதார்த்தம் என்ன?
யதார்த்தம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். எடப்பாடி பக்கம்தான் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளனர். பொதுக்குழு அவர் பக்கம்தான் இருக்கிறது. இதனால் எடப்பாடி அணியை ஆதரிப்பதை தவிர பாஜகவிற்கு வேறு வழியில்லை. எடப்பாடி அணியை ஆதரித்துவிட்டால் ஓபிஎஸ் நிலை கவலைக்கிடம்தான். அரசியலில் இருந்து உச்சபட்சமாக ஓரம்கட்டப்படும் நிலை ஏற்படும். ஒருவேளை இந்த இடைத்தேர்தலில் வாக்குகள் பிரிந்து 2- 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி அணி தோல்வி அடைகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது வேண்டுமானால் வாக்குகள் பிரிகிறதே.. இதை தடுக்க ஓபிஎஸ்ஸை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடப்பாடி எடுக்கலாம். அல்லது எடப்பாடிக்கு அந்த பிரஷர் கொடுக்கப்படலாம். ஆனால் மற்றபடி ஓபிஎஸ்சை சேர்த்துக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications