பிரபல நடிகை ராஜஸ்ரீ திடீர் மரணம்?.. பதறிய சரோஜாதேவி.. கடைசியில் பார்த்தால்? ராஜஸ்ரீயின் உயர்ந்த பண்பு
சென்னை: பிரபல நடிகை ராஜஸ்ரீ இறந்துவிட்டாரா? என்று கர்நாடக திரையுலகமே ஒருமுறை பரபரத்து போனது.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? அதைவிட ஆச்சரியம், இன்றுவரை ராஜஸ்ரீ ஒரு சத்தியத்தை கடைப்பிடித்து வருகிறார்.. அது என்ன தெரியுமா?
"காதலிக்க நேரமில்லை" படத்தி்ல் அனுபவம் புதுமை பாடல், "குடியிருந்த கோயில்" படத்தில் எம்ஜிஆருடன் வாள் நடனம், என பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ராஜஸ்ரீ.. பாமா விஜயம் படத்தில் ஒரு நடிகையாகவே தோன்றி நடித்திருப்பார்..

பிரமாதமான நடனம்: பூம்புகாரில் நடனமங்கை மாதவியாக, தன்னுடைய நடிப்பு முத்திரையை பதிவு செய்தவர்.. இப்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து, பிரபலமானவர் ராஜஸ்ரீ.. எனினும் பெரும்பாலும் கவர்ச்சி் நடனம்தான் இவரது பிரதான சினிமா பங்களிப்பாக இருந்திருக்கிறது.
தமிழ்நாட்டையே இவருடைய உருவத்தை உருவகமாகக்கொண்டு, கவிஞர் வாலி ஒரு பாட்டு எழுதினார்.. அதுதான், "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே" என்ற பாடல்.. தலைமுதல் கால் வரை ராஜஸ்ரீயை வருணித்தே அனைத்து வரிகளும் அதில் இடம்பெற்றிருக்கும்..
தாய்மொழி: தெலுங்கு தாய்மொழி என்பதால், இவருக்கு தமிழ் எழுத படிக்க வராது.. கடந்த 1978 க்குப் பிறகு எங்கும் எந்த மொழியிலும் நடிக்கவில்லை. கடைசியாக நாளை நமதே படத்தில் நடித்திருந்தார்.. ஒரு அரசியல்வாதியுடன் 1978 ல் திருமணம் நடந்துள்ளது.. ஒரு ஆண் குழந்தை பிறந்து, 4 வயது ஆரம்பிக்கும்போதே, இவரது கணவர் மாரடைப்பால் காலமாகி விட்டார்.. முழுமையாக 5 ஆண்டுகள் கூட இவரது இல்லறம் நீடிக்கவில்லை..
சத்தியம்: ஆனால், திருமணம் செய்யும்போது, "இனிமேல் எப்பவுமே நீ சினிமாவில் நடிக்கக்கூடாது" என்று இவரது கணவர் ராஜஸ்ரீயிடம் சத்தியம் வாங்கிக்கொண்டாராம்.. அதனால்தான், அவருக்கு கொடுத்த வாக்குறுதிபடி, இன்று வரை சினிமாவிலோ தொலைக்காட்சியிலோ கூட நடிக்காமல் உள்ளார் ராஜஸ்ரீ.
சினிமாவில் நடித்துவந்த ராஜஸ்ரீ, திடீரென காணாமல் போய்விட்டார்.. சாய்பாபாவின் பக்தையோ, எங்கே ஓரிடத்தில் வெளி உலகத்துக்கே தெரியாமல் வாழ்ந்திருக்கிறார்.. ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியவில்லை.. சென்னையிலா, ஆந்திராவிலா? அல்லது உயிருடனேகூட இல்லையா? என சினிமா உலகில் யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது.. ஒருநாள், கர்நாடக சேனல்களில் ராஜஸ்ரீ பாட்டுக்களை தொடர்ந்து ஒலிபரப்பி வந்திருக்கிறார்கள்..
சரோஜாதேவி: இதனை பெங்களூரில் இருந்த சரோஜாதேவி கவனித்துள்ளார்.. எதுக்காக ராஜஸ்ரீ பாடல்களை திடீரென நாள் முழுக்க ஒலிபரப்புகிறார்கள்? என்று பதறிப்போனார்.. அவருக்கு என்ன நேர்ந்ததோ என்ற கலவரத்துடன், சென்னையிலுள்ள நல்லி குப்புசாமியை தொடர்பு கொண்டு, ராஜஸ்ரீ பற்றி விசாரித்து சொல்லும்படி கேட்டுள்ளார்.
நல்லி குப்புசாமியும் ஆட்களை அனுப்பி, பல இடங்களில் விசாரித்து, கடைசியில், சினிமாவைவிட்டு ஒதுங்கி, தி.நகரில் ராஜஸ்ரீ வசிப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.. அதற்கு பிறகுதான், சரோஜாதேவிக்கு நிம்மதியானதாம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்று, தன்னுடைய மகனின் திருமணத்துக்கும் அழைப்பு தந்துவிட்டு வந்தார்.. தற்போது இவரது ஒரே மகன் அமெரிக்காவில் வசித்தாலும், சென்னை தி.நகர் வீட்டில், சினிமா வாடையே இல்லாமல் தனியாக வசித்து வருகிறார் ராஜஸ்ரீ...
சத்தியம்: கணவர் மறைந்த பின்பும் கணவருக்கு கொடுத்த வாக்கு இன்றுவரை ஒரு நடிகை காத்து வருவது ஆச்சரியத்தை கிளப்புகிறது.. சினிமா வாய்ப்புக்காக இந்த காலத்தில் என்னென்னமோ முயற்சிகளை பலரும் மேற்கொண்டுவரும் நிலையில், வாய்ப்புகள் பல தானாகவே வந்தபோதும், ராஜஸ்ரீயின் சத்தியம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.. சினிமாவைத்தாண்டியும், சினிமாத்தனம் இல்லாத பல நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறன்றன.. இதில் ராஜஸ்ரீயும் ஒருவர்...!!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications