‛உண்மையின் கதைகள்’.. அமெரிக்காவின் தேசிய மொழிப்பெயர்ப்பு விருதுக்கு ஜெயமோகனின் கதை தேர்வு!
சென்னை: அமெரிக்காவில் மொழிப்பெயர்ப்பு தேசிய விருதுக்கான இறுதிப்போட்டிக்கு தமிழ், மலையாளத்தில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட கதைகள் தேர்வாகி உள்ளது.
ஒவ்வொரு மொழிகளிலும் கதை, கவிதைகளை எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். இத்தகைய கவிதை, கதைகள் வெவ்வேறு மொழிகளிலும் பிற நாட்டை சேர்ந்தவர்கள் படிக்கும் வகையில் உரிய அனுமதியுடன் மொழிப்பெயர்க்கப்பட்டு வருகிறது.

இப்படி மொழிப்பெயர்ப்பு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவில் தேசிய மொழிப்பெயர்ப்புக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த தேசிய விருதுக்கு வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மொழிப்பெயர்ப்பு எழுத்தாளர்களின் கதை, கவிதைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் இருந்து கதை மற்றும் கவிதை மொழிப்பெயர்ப்பு பிரிவுகளில் தனித்தனியே 6 பேர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான லிஸ்ட்டை அமெரிக்க இலக்கிய மொழிப்பெயர்ப்பாளர் சங்கம் நேற்று அறிவித்தது. ஒவ்வொரு பிரிவுகளில் வெற்றி பெறும் மொழிப்பெயர்ப்பு எழுத்தாளர்களுக்கு 4 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது.
நேற்றைய தினம் வெளியான இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் தமிழ், மலையாள மொழிகளிலிருந்து மாற்றப்பட்ட மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றுள்ளன. அதாவது தமிழில் பி ஜெயமோகன் எழுதிய ‛உண்மையின் கதைகள்' என்பதை மொழிப்பெயர்த்த பிரியம்வாதா ராம்குமார் மற்றும் ஷீலா டோமியின் Valli-யை மலையாளத்தில் இருந்து மொழிப்பெயர்த்த ஜெயஸ்ரீ காலம் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் வியட்நாம் மொழியில் இருந்து தான்ஸ் நாவலான ‛சின்னடவுன்' என்பதை மொழிப்பெயர்த்ததற்காக என்குன் அன் லை, மிகோல்ஜ் கன்பெர்க்கின் ‛ஐ வூட் லைக் டூ சே சாரி, பட் தியர் நோ ஒன் டூ சே சாரி டூ' நாவலை போலிஸ் மொழியில் இருந்து மொழிப்பெயர்த்த சீன் கஷ்பர் பை, மோனிக்யூ இல்பவ்டூவின் ‛சோ டிஸ்டென்ட் ப்ரம் மை லைப்' எனும் நாவலை பிரெஞ்சு மொழியில் இருந்து மொழிப்பெயர்த்த யாரி காமரா ஆகியோரும் இறுதிப்போட்டியில் உள்ளனர்.

அதேபால் கவிதை மொழிப்பெயர்ப்பு பட்டியலில் மறைந்த நோபல் பரிசு பெற்ற நெல்லி சாக்ஸின் Flight and Metamorphosis எனும் தொகுப்பை ஜெர்மன் மொழியில் இருந்து மொழிப்பெயர்த்த லிண்டா பி. பார்ஷல், ஜோசுவா வெய்னர் இடம் பெற்றுள்ளனர். இதுமட்டுமின்றி கிரேக்க மொழியில் இருந்து Phoebe Giannisi's Cicada, சீன மொழியில் இருந்து Wong May மொழிப்பெயர்ப்புக்காக பிரியன் ஸ்னீடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அரபி மொழியில் இருந்து இமான் மெர்சலின் The Threshold மொழிப்பெயர்ப்புக்காக கிரீஸ்வெல், பிரெஞ்சு மொழியில் வீணஸ் கவுரி-கட்டாவின் The Water People மொழிப்பெயர்ப்புக்காக மரிலின் ஹேக்கர், அதேபோல் பிரெஞ்ச் மொழியில் இருந்து ஆனந்த்தா தேவியின் When the Nigt Agrees to Speak to Me எனும் மொழிப்பெயர்புக்காக காசிம் அலி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி கதை மற்றும் கவிதை மொழிப்பெயர்ப்புக்கு தனித்தனியே தேர்வு செய்யப்பட்டுள்ள மொழிப்பெயர்ப்பாளர்களில் வெற்றி பெற்றவர் யார்? என்பது நவம்பர் 11ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. *****
-
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முடிவு.. விஸ்வரூபம் எடுக்க போகும் தங்கம்.. சீக்கிரமே எல்லாம் மாறும் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை











Click it and Unblock the Notifications