பிரியா மரண வழக்கின் பிரிவு மாற்றம்..கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் கைது? போலீஸ் நடவடிக்கை
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா. சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்துவந்தார். கால்பந்து போட்டிகளில் அதிக ஆர்வம்கொண்ட பிரியா, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவ பிரியா சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்துவந்தார். கால்பந்து போட்டிகளில் அதிகம் ஆர்வம்கொண்ட பிரியா, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மூட்டுவலி காரணமாக கொளத்தூர், பெரியார் நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள், பிரியாவின் வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகியிருப்பதாகத் தெரிவித்து அறுவை சிகிச்சை செய்தனர்.

காலை இழந்த பிரியா
அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரியாவின் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்ச்சியற்றதாக இருந்தது. இதனால், அவர் உடனே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பிரியாவின் காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு இருப்பதைக் கண்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வலது காலை அகற்றினர்.

பிரியா மரணம்
கொளத்தூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி இரு தினங்களுக்கு முன் இறந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மருத்துவ குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் சிகிச்சையின் போது மருத்துவர்கள் அஜாக்கிரதையாக இருந்ததும், மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள்மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

விசாரணை அறிக்கை
மாணவிக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் காவல்துறைக்கு கிடைக்காததால் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம், காவல்துறையிடம் ஒப்படைத்தது. விசாரணை அறிக்கையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளுவார்கள் எனத் தகவல் வெளியானது.

கவனக்குறைவால் மரணம்
இதனிடையே கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பான வழக்கின் பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே சந்தேக மரணம் என போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் போலீஸ் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications