ஆவின் பால் எடை குறையுது.. அமைச்சர் நாசர் பூனைக்குட்டி மாதிரி குடிக்கிறார்.. ஜெயக்குமார் கிண்டல்!
சென்னை: ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில் இருந்து தினந்தோறும் அமைச்சர் நாசர் என்னும் பூனைக்கட்டு ஐந்தரை லட்சம் லிட்டர் பாலை குடித்துவிடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
Recommended Video
ஆவின் பால் பாக்கெட்டுகளில் எடை குறைந்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆவின் நிறுவனம் ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து விளக்கமளித்த ஆவின் நிர்வாகம், கடந்த ஜூலை 30ம் தேதி வழங்கப்பட்ட ஒரே ஒரு பால் பாக்கெட்டின் எடை மட்டுமே குறைவாக இருந்தது. அதுவும் உடனடியாக மாற்றி வழங்கப்பட்டதாக தெரிவித்தது.

இந்த நிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக சார்பில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட முக்கிய நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், சர்க்காரியா கமிஷனால் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் திமுகவினர். விஞ்ஞான ஊழல் செய்வது திமுகவினருக்கு கைவந்த கலை. அதிலும் குறிப்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவின் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பாலின் அளவைக் குறைத்து அதன்மூலம் ஆதாயம் தேடியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 37 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. அதில் தினந்தோறும் ஐந்தரை லட்சம் லிட்டரை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது. ஒரு அரை லிட்டர் பாலில் சுமார் 70மிலி அளவுக்கு குறைகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.800 கோடி ஊழல் செய்துள்ளார். அந்த பூனைக்குட்டி குடித்த பாலின் விலை ஒரு நாளைக்கு ரூ. 2.40 கோடி ஆகும்.
ஆவின் பால் பாக்கெட் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் துறை ரீதியான விசாரணை என்பது எந்த வகையிலும் நியாயம் கிடைக்காது என்று தெரிவித்தார்.
-
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்!












Click it and Unblock the Notifications