சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆமாங்க.. ஏ.ஆர்.ரகுமான் சொல்றதுதான் சரி.. ஆதரவாக வந்த அதிமுக ஜெயக்குமார்.. அப்போ அமித் ஷா கருத்து?

Google Oneindia Tamil News

சென்னை : உலகத்தின் முன்னோடி மொழியாக தமிழ் இருக்க தமிழகத்தில் இந்தி மொழியை எந்தவிதத்திலும் நுழைய விடமாட்டோம், தமிழே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது எனவும், இசைமையப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் கருத்தை வரவேற்கிறேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

Recommended Video

    கொட்டித்தீர்த்த AR Rahman | South India | Hindi Imposition | Oneindia Tamil

    பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேச வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா கூறியது இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பினை பெற்றது

    தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர், திரை பிரபலங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

    டீச்சர்னா அது எங்க பானுமதி டீச்சர்தான்.. நடிகர் ரகுமானின் 76'.. ஊட்டி பள்ளி விழாவில் நெகிழ்ச்சி டீச்சர்னா அது எங்க பானுமதி டீச்சர்தான்.. நடிகர் ரகுமானின் 76'.. ஊட்டி பள்ளி விழாவில் நெகிழ்ச்சி

    ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு

    ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு

    குறிப்பாக ஆஸ்கர் நாயகனான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி திணிப்புக்கு பதில் அளிக்கும் வகையில் சமூக வலைதள பக்கத்தில், கவிஞர் பாரதிதாசனின் வரிகளான 'இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்' என குறிப்பிட்டு, தமிழ்தாய் தமிழின் அடையாளமான 'ழ' கரத்துடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும், தமிழணங்கு எனவும் பதிவிட்டு இருந்தார். சிறிதுநேரத்திலேயே இந்த பதிவை பலரும் பகிர்ந்த நிலையில், இந்தியா முழுவதும் ட்ரெண்டானது.

    தமிழ் இணைப்பு மொழி

    தமிழ் இணைப்பு மொழி

    சிலர் அவரது புகைப்படம் குறித்து எதிர்மறை கருத்துகளை கூறினாலும் கண்டு கொள்ளவிலை ஏ.ஆர். ரஹ்மான், இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான், தமிழ் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமைப்பட வேண்டும். ஒரே இந்தியா தான் வட இந்தியா, தென்னிந்தியா என்றில்லை" என்றார். அப்[போது செய்தியாளர் ஒருவர் இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என அமித் ஷா பேசியதை பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலைத்த ஏ.ஆர்.ரகுமான் 'தமிழ்தான் இணைப்பு மொழி என ஒற்றை வரியில் பதிலளித்தார்.

    ஜெயகுமார் வரவேற்பு

    ஜெயகுமார் வரவேற்பு

    இந்நிலையில் இசைமையப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் கருத்தை வரவேற்கிறேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே இடம். மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி இல்லை. உலகத்தின் முன்னோடி மொழியாக தமிழ் இருக்க தமிழகத்தில் இந்தி மொழியை எந்தவிதத்திலும் நுழைய விடமாட்டோம்.

    இந்திக்கு இடமில்லை

    இந்திக்கு இடமில்லை

    பல இடங்களில் பிரதமர் மோடியே தமிழ் மொழியை சுட்டிக்காட்டி பேசி பெருமைபடுத்தி உள்ளார். இசைமையப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் கருத்தை வரவேற்கிறேன். தமிழே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது. தமிழ் மொழியே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். இந்திக்கு இடமில்லை." என பேசினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்தும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

    English summary
    Former AIADMK minister Jayakumar has said that the idea that Tamil should be the link language is welcome and welcomes the idea of composer AR Rahman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X