திமுகவுக்கு தாவிய கோவை சிங்காநல்லூர் அதிமுக முன்னாள் MLA சின்னசாமி.. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். கோவை சிங்காநல்லூர் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சின்னசாமி.

ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சின்னசாமி. கடந்த 2006 ஆம் ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது ஐஎன்டியுசி-யில் பிளவு ஏற்பட்ட நிலையில் சின்னச்சாமி தலைமையிலான அணியினர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தனர். அப்போது இரட்டை இலை சின்னத்தில் நின்று சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்று சின்னச்சாமி எம்.எல்.ஏ.வாக தேர்வானார். அதன் பின்னர் அதிமுகவில் அவர் இணைந்தார்.

Former AIADMK MLA Chinnaswamy Joins DMK in Presence of CM Stalin

மீண்டும் 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2016 ஆம் நடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திக்கிடம் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடியை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் கோவையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

தன்னை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் சின்னசாமி வழக்கும் தொடர்ந்தார். ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகிய இருவரையும் துரோகி எனவும் அவர் விமர்சித்தார். அதன் பின்னர் டிடிவி தினகரன் தலைமையிலான அணியில் சேர்ந்து அங்கும் தொழிற்சங்க பேரவை செயலாளராக பொறுப்பேற்றார்.

பின்னர் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பாஜகவில் இணைந்தவர் சில மாதங்களில் மீண்டும் அதிமுகவில் இணைந்து, அக்கட்சியில் செயல்பட்டு வந்தார்.

தொடர்ந்து அதிருப்தியில் செயல்பட்டு வந்த சின்னச்சாமி இன்று சென்னை அண்ணா அறிவாலையத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. முக்கிய பிரமுகர்கள் மாற்றுக் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் அதிமுக பிரமுகரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் எம் எல் ஏ, அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன், மருது அழகுராஜ், அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் என பலர் அதிமுகவில் இருந்து திமுகவில் அண்மையில் இணைந்தனர். இந்நிலையில் தான் சிங்காநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ சின்னச்சாமி, தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+