காங்கிரஸ் கட்சியில் இன்று இணைகிறாரா தமிழக தீயணைப்புத் துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி?
சென்னை: தமிழக தீயணைப்புத் துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
1989 ஆம் ஆண்டு தமிழக பேட்ச்சை சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பி.கே. ரவி. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான ரேஸில் இவரும் இடம்பெற்றிருந்தார்.

மாநில டிஜிபிக்கான ரேஸில் முதலிடத்தில் சஞ்சய் அரோராவும் இரண்டாவது இடத்தில் பி.கே.ரவியும் இருந்தனர். இந்த நிலையில்தான் பி.கே.ரவிக்கு தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபி பதவி ஒதுக்கப்பட்டது.
கடந்தாண்டு தீயணைப்புத் துறை டிஜிபியாக பணியாற்றி வந்த பி.கே.ரவி தமிழக அரசின் உத்தரவின் பேரில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதற்கான காரணம் தெரியவில்லை . ஆனால் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பது காவல் துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அவர் ஊர்க்காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இவரது பதவிக்காலம் முடிவடைய 3 மாதங்கள் உள்ள நிலையில் பி.கே. ரவி விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்பு பி.கே. ரவி இணைகிறார் என்கிறார்கள்.
இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைக்கும் என தெரிகிறது. ஏற்கெனவே தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஓய்வு பெற்ற டிஜிபி கருணாசாகர் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.கே. ரவி 34 ஆண்டுகள் பணிகாலத்தில் இருந்த போது பல்வேறு முக்கிய வழக்குகளை திறம்பட விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தார். தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்த போது விபத்தில்லா தீபாவளி என்ற முன்னெடுப்பை எடுத்தார். தமிழகம் முழுவதும் தீவிபத்துகளை தடுக்க 6,673 தீயணைப்பு வீரர்களை நியமித்தார். மேலும் 1,610 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள் நலனுக்காக நடத்தியுள்ளார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications