பிரதமர் வர்றாரா? 8 வருஷம் எட்டிக் கூட பார்க்கலையே! ஓட்டு அரசியலா?வெளுத்து வாங்கிய பார்வர்ட் பிளாக்!
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று எட்டு ஆண்டுகளாகியும் பசும்பொன் பக்கம் எட்டிக் கூட பார்க்காத நிலையில் தற்போது மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பசும்பொன் வருவதாக யூகங்களை கிளப்பி விடுவதாகவும், முக்குலத்தோர் அமைப்புகள் பிரதமரின் வருகையை வாக்கு வங்கி அரசியலாகவே பார்ப்பதாக பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீரரும் புகழ் பெற்ற அரசியல் தலைவருமான தேவர் திருமகனார் என அழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா அக்டோபர் 30ஆம் தேதி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட இருக்கிறது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அவரது நினைவிடத்தில் இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மக்கள், ஆயிரக்கணக்கில் திரள்வார்கள் என்பதால் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதம மோடி வருகை
இதனிடைய அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து மரியாதை செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரதமர் வருவது இன்னும் உறுதியாகாத நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களும் பிரதமர் வருகை குறித்து முழுமையான தகவல்களை தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தேவர் சமுதாய மக்களிடையே வரவேற்பை பெறும் என பாஜக நம்புகிறது. மேலும் 2024 மக்களவைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் குறிப்பிட தகுந்த வெற்றியை பெறுவதற்காக பாஜக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை வாக்கு வங்கி அரசியலுக்கானது என முக்குலத்தோர் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஃபார்வேர்ட் பிளாக் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரஞ்சித் போஸ் பல்வேறு தகவல்களை விரிவாக பகிர்ந்து கொண்டார். அதில் "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் விரதம் இருந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு நேரில் வருவார் எனக் கூறியிருந்தார்.

வாக்கு அரசியல்
ஆனால் பிரதமராக பதவி ஏற்று 8 ஆண்டுகள் பசும்பொன் பக்கமே எட்டிப் பார்க்காத பிரதமர் நரேந்திர மோடி தற்போது வருகை தருவதாக யூகங்களை கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதுவும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை பிரதமர் நரேந்திர மோடி வந்தாலுமே அது வாக்கு அரசியலுக்காக என்பதையே காட்டுகிறது. தேவர் நினைவிடத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம் வழிபடலாம். ஆனால் அது பக்திக்காக இருக்க வேண்டுமே தவிர வாக்கு அரசியலுக்காக இருக்கக் கூடாது.

மதுரை விமான நிலையம்
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ராணுவத்திற்கு ராணுவ வீரர்களை திரட்டியது என பல்வேறு தியாகங்களை செய்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகால கோரிக்கை இது இதற்காக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம் ஆனால் இதுவரை காங்கிரஸ் அரசும் பாஜக அரசும் மாறி மாறி ஆட்சி செய்த போதும் இது தொடர்பான அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை.

முக்குலத்தோர் சமுதாயம்
ஒருவேளை உண்மையிலேயே பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் மதுரை விமான நிலையத்திற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும். அப்படி செய்வது அவருக்கும் பெருமை சேர்க்கும் தேவருக்கும் பெருமை சேர்க்கும் அதை விடுத்து வாக்கு வங்கி அரசியலுக்காக தேவர் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்பதை முக்குலத்தோர் சமுதாயத்தின் கோரிக்கை.
-
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications