ஏர்போர்ட் தனியார்மயம்? ஜூனில் ஜிஎம்ஆர் தலைவருடன் விஜய் சந்திப்பு.. ஆகஸ்டில் கடிதம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தை தனியார்வசம் ஒப்படைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் ஆகஸ்ட் மாதத்தில் கடிதம் எழுதி இருக்கிறார். இதனிடையே பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜூன் 18ஆம் தேதி ஜிஎம்ஆர் குழுமத்தின் தலைவருடன் விஜய் சந்திப்பு நடத்தி இருக்கிறார். இதனால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் வசம் ஒப்படைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த கடிதத்தில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. அதன் வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான விமான நிலைய உட்கட்டமைப்பும், நிர்வாகமும் முக்கியமானவை.

Vijay

பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்கு கையாளும் திறன் ஆகிய மூன்று அம்சங்களிலும் சென்னை விமான நிலையம் மேம்பட வேண்டும். முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் தமிழ்நாட்டிற்கு சிறப்பு விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர் - நிர்வாகமான இந்திய விமான நிலைய ஆணையத்தை மாற்றிவிட்டு வேறு ஆபரேட்டர் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு மாநிலங்களிலும் விமான நிலையங்கள் தனியார்மயம் ஆக்கப்பட்டு வருகின்றன. அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. கடந்த ஆண்டு திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முயற்சித்த போது, அப்போதைய முதல்வர் பினராயி விஜயன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் தமிழக முதல்வர் விஜய் சென்னை விமான நிலையத்தை தாமாகவே முன் வந்து தனியார் வசம் ஒப்படைக்க கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தை ஆகஸ்ட் மாதத்தில் விஜய் எழுதி இருக்கிறார். அதே ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தான் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டார்.

இதனிடையே சென்னை விமான நிலையம் அதானி அல்லது ஜிஎம்ஆர் குழுமத்தின் வசம் ஒப்படைக்கப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே ஜூன் 18ஆம் தேதி முதல்வர் விஜய்யை ஜிஎம்ஆர் குழுமத்தின் தலைவர் ஜிபிஎஸ் ராஜு தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு நடந்த பின்னரே பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக தொடர் ஆலோசனைகள் நடந்துள்ளன.

அதேபோல் 2 மாதங்களுக்குள் பிரதமர் மோடிக்கு விஜய் கடிதமும் எழுதி இருக்கிறார். ஏற்கனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் எடுத்தது. இந்த திட்டம் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன் தான் ஜாய் ஆலுக்காஸ் சிஇஒ ஜான் விஜய்யை சந்தித்திருந்தார். தற்போது ஜிஎம்ஆர் குழுமத்தினர் சந்தித்த 2 மாதங்களில் விஜய் இப்படியொரு கடிதம் எழுதி இருப்பது பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+