Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மதுபோதை" வாகனத்தில் பின் அமர்ந்து செல்வோர் கவனத்திற்கு.. காவல்துறை எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு மட்டும் 11,419 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 1,026 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

கிட்டத்தட்ட இந்தியாவில் அதிகளவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் பட்டியலில் சென்னை முன்னிலையில் உள்ளது. இதற்கு போக்குவரத்து விதிகளை மீறுவது, மது அருந்தி வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவையே காரணமாக உள்ளன.

 போதையில் வாகனம் ஓட்டினால் அபராதம்

போதையில் வாகனம் ஓட்டினால் அபராதம்

இதனால் சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், பல்வேறு செயல் திட்டங்களையும் அமல்படுத்தி வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தில், தமிழகத்தில் மது குடித்துவிட்டு வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு மட்டும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டு அவை நீதிமன்றம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன.

பழைய விதி

பழைய விதி

இதன் காரணமாக கடந்தாண்டு மட்டும் சென்னையில் மது குடித்து போதையில் வாகனம் ஓட்டியதாக 1,178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் இன்று முதல் சென்னையில் புதிய போக்குவரத்து விதி அமலுக்கு வந்துள்ளது. பழைய விதியின் படி, குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபரிடம் மட்டுமே போக்குவரத்து போலீசார் அபராத தொகை பெற்று வந்தனர்.

புதிய விதி அமல்

புதிய விதி அமல்

தற்போது புதிய போக்குவரத்து விதிகளின் படி, வாகன ஓட்டுநர் குடிபோதையில் இருந்து, பின்னால் அமர்ந்து செல்வோர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து காவல்துறை விளக்கம்

போக்குவரத்து காவல்துறை விளக்கம்

இந்த விதிகள் பொதுமக்கள் சவாரி செல்லும் போது பின்பற்றப்படாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும் அபராதம் விதிக்கப்படுவதாகவும் சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185 போதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் 188- குற்றத்திற்கு துணை போகுதல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+