பெட்ரோல், டீசல் விலை 55 வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.40க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் 55 நாட்களாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 101 ரூபாய் 40 காசுகள் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 91 ரூபாய் 43 காசுகள் ஆகவும் விற்பனையாகின்றன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
கடந்த ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு,கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதன் காரணமாக நாடு முழுதும் மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகரிக்கவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்ததை அடுத்து எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.40க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 55 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.
டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் தொடர்ந்து சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாமல் சீராக ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா,மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications