பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் உண்டா?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
சென்னை: பெட்ரோல், டீசல் தொடர்ந்து 91ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24 க்கும் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.

கடந்த மே 21ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது.
அன்றைய தினம் முதல் பெட்ரோல் டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 63 வது நாளாக சென்னையில் இன்றும் மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாகவும் விற்பனையாகி வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை 91 நாட்களாக உயராதது மன நிம்மதியை அளித்தாலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை அடிக்கடி உயர்த்தப்படுவது இல்லத்தரசிகளை கவலையடையச் செய்துள்ளது.
இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் இப்போது 94 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. நேற்று இது 91 டாலர் வரையிலும் கூட சென்றது. கடந்த ஆறு மாதங்களில் இதுதான் குறைந்தபட்ச விலையாகும். இருப்பினும், உள்ளூர் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.
இந்தியா ரூபாயின் மதிப்பும் வேகமாகச் சரிந்து வருகிறது. இப்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாபியன் மதிப்பு 79.62க்கு சரிந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய நாம் இந்திய ரூபாய் மதிப்பில் அதிகமாகச் செலவிட வேண்டி உள்ளது. உள்ளூர் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications