பெட்ரோல், டீசல் விலையில் 2வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு

பெட்ரோல், டீசல் விலை இன்றைய தினம் மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விலையில் எந்த வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. சென்னையில் இன்று பெட்ரோல், லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச எண்ணெய் நிறுவனங்களினால் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது.

Fuel prices Today July 01, 2021: No changes Petrol, diesel prices today

ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. நாட்டில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ராஜஸ்தான் மற்றும் ஓடிசா சில பகுதிகளில் டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

தமிழகத்தில் சென்னையைத் தவிர பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது. ஸ்பீடு பெட்ரோல் 106 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. அரியலூர், கோவை, கடலூர்,தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு,கள்ளக்குறிச்சி,காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,ராணிப்பேட்டை,சேலம்,சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர்,திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம்,விருதுநகர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.

இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் உயர்வால் டெல்லியில் மெட்ரோ ரயிலில் திடீரென கூட்டம் அதிகரித்து உள்ளது. ரயிலுக்காக பல நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Fuel prices Today July 01, 2021: No changes Petrol, diesel prices today

ராகுல்காந்தி கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, பொது போக்குவரத்துக்கான நீண்ட வரிசை, கொரோனா கட்டுப்பாடுகளால் மட்டும் அல்ல. உங்கள் நகரின் பெட்ரோல்-டீசல் விலையை பாருங்கள், உண்மையான காரணம் புரியும் என குறிப்பிட்டு உள்ளார்.

Fuel prices Today July 01, 2021: No changes Petrol, diesel prices today

விலை உயர்வுக்கு காரணம் ஏன்?

கச்சா எண்ணெய் விலை உயர்வு மிகவும் சவாலாக இருக்கிறது என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வால் வளர்ச்சி பாதிக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்வு மிகவும் சவாலாக இருக்கிறது. அதன் விலையை நியாயமானதாக நிர்ணயிக்க வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தி நாட்டு நண்பர்களை பல தடவை வற்புறுத்தி விட்டேன். ஓபெக் எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பு கூட்டம், இன்று ஜூலை 1ஆம் தேதி நடக்கிறது. அதில், விலை சற்று குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+