• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆடியோ விவகாரத்தில் துச்சாதனனுக்கே வெற்றி.. திருச்சி சூர்யா சிவாவை சொல்கிறாரா காயத்ரி ரகுராம்?

Google Oneindia Tamil News

சென்னை: ஆடியோ விவகாரம் குறித்து டெய்சி சரணுடன் திருச்சி சூர்யா சிவா சுமூகமாக போவதாக அறிவித்த நிலையில் துச்சாதனனுக்கு வெற்றி என காயத்ரி ரகுராம் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். திருச்சி சூர்யா சிவாவை துச்சாதனன் என்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓபிசி மாநில பொதுச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா சிவாவும் சிறுபான்மை பிரிவு மாநில தலைவராக உள்ள டெய்சி சரணுக்கும் இடையே நடந்த ஆடியோ உரையாடல் பொது வெளியில் லீக்கானது.

அந்த ஆடியோவில் டெய்சியை ஆபாசமான வார்த்தைகளால் விமர்சித்த திருச்சி சூர்யா சிவா அவர் பதவிக்கு வந்ததையும் கொச்சையாக பேசியிருந்தார். மேலும் அடுத்த ஆண்டுக்குள் வெட்டி மெரினாவில் வீசிவிடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

பாஜகவிலிருந்து திருச்சி சூர்யா சிவா 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநீக்கம்- அண்ணாமலைபாஜகவிலிருந்து திருச்சி சூர்யா சிவா 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநீக்கம்- அண்ணாமலை

ஆடியோ கேட்கவே நாரசம்

ஆடியோ கேட்கவே நாரசம்

அந்த ஆடியோவை கேட்பதற்கே நாரசமாக இருந்த நிலையில் திருச்சி சூர்யா சிவாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அண்ணாமலையோ அவரை பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டு இந்த விவகாரத்தை பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிட்டார்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

ஆயினும் காயத்ரி ரகுராம் கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி அவரிடம் விசாரணை ஏதும் கேட்காமல் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டார். இது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஆண்களுக்கு ஒரு நியதி, பெண்களுக்கு ஒரு நியதியா என்ற கேள்வியும் எழுந்தது. இன்றைய தினம் திருப்பூர் பாஜக அலுவலகத்தில் கனகசபாபதி முன்பு திருச்சி சூர்யா சிவாவும் டெய்சி சரணும் ஆஜராகினர்.

கனகசபாபதி

கனகசபாபதி

அப்போது அவர்களிடம் கனகசபாபதி விசாரணை நடத்தினார். இதையடுத்து டெய்சியும் திருச்சி சூர்யா சிவாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் விரும்பத்தகாத சில செயல்கள் நடந்துள்ளது பாஜகவிறகு கெட்டப் பெயரை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா சிவா எனது தம்பி போலவே பழகினார். இந்த விவகாரத்தில் இருவரும் பரஸ்பரம் பேசி இத்துடன் இந்த பிரச்சினையை முடித்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளோம்.

பெரிதுப்படுத்த வேண்டாம்

பெரிதுப்படுத்த வேண்டாம்

எனவே ஊடகங்கள் இதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இது யாருடைய வற்புறுத்தலும் இல்லை. அக்கா தம்பியாகவே நாங்கள் தொடர்ந்து பயணிக்க முடிவெடுத்துள்ளோம் என்றார். இது குறித்து சூர்யா சிவா பேசுகையில் இருவருக்கும் இடையே தனிப்பட்ட உரையாடலே நடந்தது. ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை சந்தித்தோம். எங்கள் இருவரின் தரப்பிலிருந்தும் ஆடியோ வெளியாகவில்லை. வேறு யார் மூலமாக வெளியானது என்பது விசாரணையில் தெரியவரும். நாங்கள் எந்த சூழலில் தகாத வார்த்தைகளை பேசினோம் என்பதையும் தெரிவித்துவிட்டோம். நான் பேசியது தவறு என்றால் கட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன் என திருச்சி சூர்யா சிவா தெரிவித்திருந்தார்.

துச்சாதனன் என விமர்சித்த காயத்ரி ரகுராம்

துச்சாதனன் என விமர்சித்த காயத்ரி ரகுராம்

என்னதான் சமாதானமாக போவதாக அறிவித்தாலும் அத்தனை ஆபாச வார்த்தைகளால் ஒரு பெண்ணை அர்ச்சனை செய்துவிட்டு எந்தவித நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் திருச்சி சூர்யா சிவா காப்பாற்றப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: துச்சாதனன் வென்றார் என குறிப்பிட்டுள்ளார். துச்சாதனன் மகாபாரத்தில் வரும் கதாபாத்திரம். இவர் கண்பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனுக்கும் அவரது மனைவி காந்தாரிக்கும் பிறந்த 100 பிள்ளைகளுள் ஒருவன்.

பாண்டவர்களில் மூத்தவராகிய தருமன்

பாண்டவர்களில் மூத்தவராகிய தருமன்

பாண்டவர்களில் மூத்தவராகிய தருமன், தனது தம்பிகளையும் அவரது மனைவி திரௌபதியையும் பணயம் வைத்து சூதாடினார். துரியோதனன் ஆணைபடி திரௌபதியை அவைக்கு இழுத்து வந்த துச்சாதனன் அவளது சேலை உருவ முற்பட்டார். அப்போது கிருஷ்ணா என அழைக்க, துச்சாதனன் இழுக்க இழுக்க திரௌபதியின் சேலை நீண்டு கொண்டே இருந்தது. இதில் திரௌபதியின் மானம் காப்பாற்றப்பட்டாலும், துச்சாதனனின் ரத்தத்தை என் கூந்தலில் தடவும் வரை நான் கூந்தலை அள்ளி முடிய மாட்டேன் என சபதம் எடுத்தாள். இப்படியாக இதிகாச கதை செல்லும். இதில் திரௌபதியின் சேலையை உருவும் துச்சாதனனுடன்தான் திருச்சி சூர்யா சிவாவை காயத்ரி ஒப்பிட்டு விமர்சித்ததாக தெரிகிறது.

English summary
BJP's suspended activist Gayathri Raghuram compares Trichy suriya Siva as Dushasana?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X