ஒரே காது வலி.. மருத்துவமனை சென்ற ப்ளஸ் 1 மாணவி திடீர் பலி.. சென்னையில் ஷாக்.. என்னாச்சு?
காது வலிக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அபிநயாவை அவரது தாயார் நந்தினி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, காது பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த மருத
சென்னை: காது வலிக்காக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற ப்ளஸ் 1 மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் திருவொற்றியூரில் பெரும் சோகத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தவறான சிகிச்சையால்தான் மாணவி உயிரிழந்ததாக கூறி அவரது பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதாரண காது வலிக்காக சென்ற மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பதற வைக்கும் உயிரிழப்புகள்
சமீபகாலமாக தவறான சிகிச்சையால் மக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. காய்ச்சலுக்காக மருத்துவமனையில் ஊசி போட்ட இளைஞர் உயிரிழப்பு, பிரசவத்துக்கு சென்ற பெண்ணுக்கு பார்வை பறிபோனது போன்ற செய்திகள் ஈரக்குலையை நடுங்கச் செய்வதாக உள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் போலி மருத்துவர்களால் நிகழ்கிறதா அல்லது மருத்துவர்களின் அலட்சியப்போக்கால் நிகழ்கிறதா என சந்தேகங்களை எழுப்புகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் சென்னையில் நடந்திருக்கிறது.

அடிக்கடி காது வலி
சென்னையை அடுத்த திருவொற்றியூரை சேர்ந்தவர் நந்தினி. இவரது மகள் அபிநயா (16), ராயபுரத்தில் இயங்கும் தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வருகிறார். இவருக்கு சிறு வயது முதலாகவே காது வலி இருந்து வந்துள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக தாங்க முடியாத அளவுக்கு அவருக்கு காது வலி ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் படிப்பிலும் அபிநயாவால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை.

அறுவை சிகிச்சை
இந்நிலையில், இந்த காது வலிக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அபிநயாவை அவரது தாயார் நந்தினி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, காது பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்தால்தான் காது வலியை சரிசெய்ய முடியும் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 15-ம் தேதி மாணவி அபிநயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அன்றைய தினம் இரவு அபிநயாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில், அறுவை சிகிச்சை முடிந்ததும் அபிநயாவுக்கு திடீரென இதயத் துடிப்பு அதிகமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பரிதாபம்
இதையடுத்து, வேறொரு தனியார் மருத்துவமனையில் அபிநயா அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது இதயத் துடிப்பு சீராகவில்லை. அதன் பின்னர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிநயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும், பொதுமக்களும் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போலீஸார் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், சிகிச்சை அளித்த மருத்துவர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications