ஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை!
சென்னை: தமிழ் மாநில காங்கிரசின் 7ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஜி.கே.வாசன், த.மா.கா அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றினார்.
அரசியல் தலைவர்கள் பலர் த.மா.காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 7ஆம் ஆண்டு பிறக்கிறது. கட்சியின் 7ம் பிறந்த நாளை அக்கட்சியினர் சிறப்புடன் கொண்டாடிவருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.க அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கட்சி கொடியை ஏற்றினார். அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் நெட்டிசன்கள் பலரும் த.மா.கா குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். கட்சி மேலும் முன்னேற வாழ்த்துக்கள் என ஒரு சிலரும், கட்சிக்கு ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள்தான் வருகிறதே தவிர, கட்சி வளர்ந்த மாதிரி தெரியவில்லை என மற்றொரு சாராரும் கருத்து தெரிவித்தனர்.
நெட்டிசன்கள் கூறியதைபோல் த.மா.கா தனிக்கட்சியாக செயல்பட்டு, கட்சியின் நிறுவனர் ஜி.கே.மூப்பனார் மறைவுக்கு பிறகு எதிர்பார்த்த அளவு வளரவில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். வருகிற 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அக்கட்சி அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்.. காரணத்தை விளக்கி கடிதம்.. அதிர்ச்சியில் வாசன்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?












Click it and Unblock the Notifications