ரேஷன்தாரர்களே.. தீபாவளிக்கு ரேஷனில் வாங்கிட்டீங்களா? ரேஷன் வாங்காதவர்களுக்கு அடுத்த மாதம் கிடைக்குமா
சென்னை: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.20 கோடிக்கு பட்டாசுகள் விற்க ஏற்பாடு செய்திருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்திருந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ரேஷன் பொருட்கள் வாங்குவது குறித்த முக்கிய வேண்டுகோள் தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அது என்ன?
ரேஷன் கார்டு என்பது வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் அட்டை ஆகும். இந்த ரேஷன் அட்டையை வைத்து ரேஷன் கடைகளில், இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

உதவிகள்: இதுமட்டுமில்லாமல், பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன..
அதேபோல பண்டிகைகளை முன்னிட்டும் கூடுதல் பொருட்கள் வழங்குவது வாடிக்கையாகும்.. இதுபோக, குறைந்த விலையில் 15 மளிகை பொருட்களை மக்களுக்கு கொடுக்கவும் அரசு முடிவு செய்து, அதன்படி, ரூ 499 -க்கு மளிகை பொருள் தொகுப்பானது, அமுதம் பிளஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகள்: தீபாவளியையொட்டி இருப்புகளை ரேஷன் கடைகளில் அதிகப்படுத்தி தயாராக வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே ரேஷன் கடைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.. அதனால், பலரும் புத்தாடை வாங்குவது, சொந்த ஊர் செல்வது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தியதால், ரேஷன் கடைகளில் இந்த மாதம் பொருட்கள் சரிவர வாங்கவில்லை.
எனவே, இம்மாதம் பொருட்கள் வாங்காதவர்கள், அடுத்த மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ள அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு ரேஷன்தாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை: அதுமட்டுமல்ல, 2 வாரங்களுக்கு முன்பு சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், கனமழை பெய்தது. தற்போதும் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழலில் பலரும் உள்ளதால், ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கவில்லை என்கிறார்கள்.. அதனால், இந்த மாத ரேஷன் பொருட்களை, அடுத்த மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதனிடையே நேற்றைய தினம் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசு ஆகியவை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக எளிய முறையில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
3 தொகுப்புகள்: அந்தவகையில், 3 வகையான தொகுப்புகள் பொதுமக்கள் விற்பனைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மக்களுடைய நம்பிக்கையை பெற்று தரமான பொருட்களை குறைந்த விலையில் தரும் நிறுவனம்தான் கூட்டுறவு சங்கம். இப்போது புதிதாக அதிரசம், முறுக்கு செய்யும் தொகுப்பு ரூ.190-க்கு அளிக்கின்றனர்.
மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பிரீமியம் மற்றும் எலைட் என 2 வகையாக வழங்கப்படுகிறது. அதில் பிரீமியம் ரூ.199-க்கும், எலைட் ரூ.299-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சிறிய குடும்பத்தினரும் பெரிய அளவில் சேமிக்கும் தொகுப்பாக அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications