தங்க நெக்லஸுக்காக ஆடையை உருவி சோதனை.. இரவெல்லாம் கதறியழுத கேரளா பணிப்பெண்! ஓடிவந்த மனித உரிமை ஆணையம்
திருவனந்தபுரம்: வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்கள், சில சமயம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுவிடுகிறார்கள்.. 4 நாட்களுக்கு முன்புகூட, போபாலில் ஒரு தொழிலதிபர் வீட்டில் நகைகள், பணத்தை திருடிய பணிப்பெண் ரகசிய கேமராக்கள் மூலம் கையும் களவுமாக மாட்டினார்.. ஆனால், எத்தனையோ வீடுகளில் விசுவாசத்துடன் வேலை பார்க்கும் பல பணிப்பெண்கள் இருக்கவே செய்கிறார்கள்.. இது தெரியாமல் வீட்டு வேலை செய்கிறார்கள் என்பதற்காகவே, அவர்கள் மீது திருட்டு பழி போடுவது ஏற்க முடியாத ஒன்று. அப்படித்தான் கேரளாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட தலித் பெண்ணுக்காக, மனித உரிமை ஆணையம் குரல் எழுப்பி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு சுள்ளிமானூர் என்ற பகுதியில் வசித்து வருகிறார் அந்த 39 வயது பெண்.. வறுமை காரணமாக, பேரூர் கடையில் இஷா என்பவர் வீட்டில் வேலை பார்த்து வந்தார்..

கடந்த 13-ந் தேதி வேலை முடிந்ததும் வீட்டிற்கு இந்த பெண் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டார்.. அப்போது, தன்னுடைய வீட்டில் தங்க நகை காணவில்லை என்றும், வீட்டுவேலை செய்யும் பணிப்பெண் மீதுதான் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர் பேரூர் கடை போலீசுக்கு தந்துள்ளார்..
திடீரென வந்த போன்
இதையடுத்து, வீட்டுக்கு செல்ல பஸ்ஸுக்காக காத்திருந்த பணிப்பெண்ணுக்கு போன் செய்துள்ளார்கள்.. நீங்கள் வேலை செய்யும் வீட்டில் 5 பவுன் தங்க சங்கிலி திருடு போய்விட்டது. உங்கள் மீதுதான் சந்தேகம் உள்ளது. அதனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணும், உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றிருக்கிறார்.. "நான் எந்த நகையையும் திருடவில்லை, என்னை நம்புங்கள்" என்று பலமுறை விளக்கம் தந்துள்ளார் அந்த பெண்.. ஆனால், அங்கிருந்த மகளிர் போலீசாரோ, அப்பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை செய்திருக்கிறார்கள். நகை எதுவுமே அப்பெண்ணிடம் இல்லை.. அப்போதும் அவரை விடுவிக்காமல், இரவு முழுவதும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.. அந்த பெண்ணுக்கு சாப்பாடும் தரவில்லை.. குடிக்க தண்ணீர் கேட்டும் தரவில்லையாம்.
மிரட்டி திட்டி அனுப்பினர்
மறுநாள் திருடுபோன தங்க நகை கிடைத்து விட்டதாக பேரூர் கடை போலீசாருக்கு, புகார் தந்தவரே கூறியிருக்கிறார். ஆனால், இந்த விவரத்தையும் அப்பெண்ணுக்கு போலீசார் சொல்லவில்லை. அதற்கு பதிலாக, விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் வர வேண்டும் என்று திட்டி அனுப்பி வைத்திருக்கிறார்கள். வீட்டிற்கு வந்தபிறகுதான், காணாமல் போன நகை திரும்ப கிடைத்துவிட்டது என்ற விஷயமே பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது..
இதனால் உச்சக்கட்ட அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இந்த சம்பவம் குறித்து முதலமைச்சருக்கும், டிஜிபிக்கும் புகார் தந்தார்.. இந்த புகார் தொடர்பாக திருவனந்தபுரம் சரக டிஐஜி விசாரணை மேற்கொண்டார்.. இறுதியில், பேரூர் கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்..
தலையிட்ட மனித உரிமை ஆணையம்
எனினும், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பெண் திருப்தி அடையவில்லை.. தன்னை நிர்வாணமாக்கி சோதனை செய்த அனைத்து போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்..
இதனிடையே, மனித உரிமை ஆணையமும் இதில் தலையிட்டிருக்கிறது.. 20 மணி நேரத்திற்கும் மேலாக போலீஸ் ஸ்டேஷனில் தலித் பெண் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரத்திற்கு வெளியே பணியாற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு கூடுதலான அதிகாரி தலைமையில் முழு விசாரணை நடத்த வேண்டும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் பரபரப்பு நிலவுகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications