சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தங்கம் விலை திடீர் உயர்வு.. சில நாட்களாக ரேட் இறங்கி வந்த நிலையில் 'சர்ரென்று' ஏற்றம்!

Google Oneindia Tamil News

சென்னை: தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. தொடர்ந்து இறங்கி வந்த தங்கம் விலை தற்போது உயர்ந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Recommended Video

    #BREAKING ஜெட் வேகத்தில் தங்கம் விலை!

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், அது இந்திய சந்தையில் தங்கத்தின் விலையில் எதிரொலித்தது.

    எனவே தங்கம் விலை தொடர்ந்து சரிவடைந்து வந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ. 4458க்கு விற்பனையானது.. பவுனுக்கு ரூ.88 குறைந்து ரூ.35664க்கு விற்பனையானது.

    திடீர் உயர்வு

    திடீர் உயர்வு

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. அதாவது, கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.36,280 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4535 என்ற அளவில் உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை

    பெட்ரோல், டீசல் விலை

    இன்னொரு பக்கம், தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த வாரம் வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து அதன் விலை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.

    டெல்லி நிலவரம்

    டெல்லி நிலவரம்

    டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 87.30, டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.77.48 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மும்பையிலும் பெட்ரோல் ரூ.93.83 மற்றும் டீசல் ரூ.84.36 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை விலை

    சென்னை விலை

    சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசு உயர்ந்து லிட்டர் 89.70 ரூபாய்க்கும் , டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து லிட்டர் 82.66 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Gold prices have risen sharply. People are surprised as the price of gold, which has been falling steadily, is now high.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X