ரேஷன் கடைகளுக்கு பறந்த குட் நியூஸ்.. அடேங்கப்பா 500 கடைகளா?.. அமைச்சர் பெரியசாமி அதிரடி
ரேஷன் கடைகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பெரியசாமி வெளியிட்டுள்ளார்
சென்னை: தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் லட்சக்கணக்கான மக்கள் நன்மை அடைந்து வருகின்றனர்.
அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் உள்ளது.. மற்றொரு புறம், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு மேற்கொண்டு வருகிறது.

கூட்டுறவு சங்கம்
இதனிடையே, கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அவ்வப்போது பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியாகி கொண்டிருக்கிறது... அதேசமயம், தமிழகத்தில் முழு நேரக் கடைகளில் 6 ஆயிரத்து 162 கடைகளுக்கு இன்னும் கட்டிடங்கள் கட்டப்படாமல் இருந்து வருகிறது.. 773 பகுதி நேர கடைகளுக்கு கட்டிடங்கள் கட்டப்பட வேண்டிய தேவையும் உள்ளது.. இப்போதைக்கு 150 கடைகளுக்கு கட்டிடம் கட்டும் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.

சட்டப்பேரவை
இப்படிப்பட்ட சூழலில்தான், நடந்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தில், முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்து வருகிறார். அந்த வகையில், கடந்த வாரம் பேசியபோது, "ஆயிரம் அட்டைகள் மற்றும் அதற்கு மேல் உள்ள அட்டைகளை கொண்ட கடைகள் பல்வேறு கிராமங்களில் உள்ளன... ஆனால், அவையெல்லாம் இன்னமும் பிரிக்கப்படாமல் உள்ளன... அந்த ஆய்வுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல, நகர் பகுதிகளில் ஆயிரம் அட்டைகளை கொண்ட கடைகள் நிறைய இடங்களில் இருக்கின்றன..

சிக்கல்கள்
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் அதுபோன்ற கடைகள் ஏராளமாக உள்ளன... வாடகை, அரசுக்கான இடங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன என்றாலும, ஆயிரம் அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளைப் பிரிக்க உணவுத் துறையுடன் இணைந்து பேசி முடிவெடுப்போம் என்று நம்பிக்கை தகவலை அளித்திருந்தார்.. இந்நிலையில், அமைச்சர் பெரியசாமி இன்றும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி துறை
பேரவையில் அவர் பேசும்போது, "6000க்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் வாடகை கட்டித்தில் இயங்கி வருகின்றன. மேலும் 700 க்கும் மேற்பட்ட பகுதிநேர நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. வருடத்திற்கு 500 நியாயவிலை கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி , ஊரக வளர்ச்சி துறை போன்ற துறைகளிடம் போதிய நிதி பெற்று சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications