சென்னை மக்களே.. நல்ல செய்தி.. வேறலெவல் வசதிகளுடன் அடையாளமே மாறப்போகும்.. பஸ் டிப்போக்கள்
திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி, ஆகிய மூன்று பேருந்து டிப்போக்களை நவீன வசதிகளுடன் வணிக வளாகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி, ஆகிய மூன்று பேருந்து டிப்போக்களை பொதுமக்கள் - தனியார் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1543 கோடி செலவில்' நவீன வசதிகளுடன் வணிக வளாகமாக மாற்ற மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்திருக்கிறது.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமாக பிராட்வே, திருவான்மியூர், அடையாறு, திருமங்கலம், வடபழனி, கிண்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பேருந்து நிலையங்கள் உள்ளன. இந்தப் பேருந்து நிலையங்களை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்த பேருந்து நிலையங்களில் இருந்து தான் தினசரி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால் பயணியருக்கு போதிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத. பேருந்து நிலையங்களில் அமரும் இடம், கழிப்பறை, குடிநீர் வசதி, சுகாதாரமான இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை. மழைக் காலங்களில் பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்குவதாக உள்ளது.

வடபழனி
இந்நிலையில் சென்னையில் உள்ள திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி, ஆகிய மூன்று பேருந்து டிப்போக்களை ரூ.1543 கோடி செலவில்' வணிக வளாகமாக மாற்ற மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்திருக்கிறது. திருவான்மியூர் பஸ் டிப்போ ரூ.446 கோடி மதிப்பிலும், வடபழனி பஸ் டிப்போ ரூ.610 கோடி மதிப்பிலும், வியாசர்பாடி பஸ் டிப்போ ரூ.485 கோடி மதிப்பிலும் நவீன மயமாக்கப்படள்ளது. பல்வேறு வசதிகளுடன் கூடிய வணிக வளாகமாக மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தரைத்தளம்
பொதுமக்கள், தனியார் பங்களிப்பு என்ற முறையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநகர் போக்குவரத்துக் கழகம் டெண்டர் கோரி இருக்கிறது. இந்த பேருந்து நிலையங்களில், தரைத் தளம் மற்றும் முதல் தளம் பேருந்துகளை நிறுத்துவதற்கான இடமாக இருக்குமாம். 2-வது தளம் பேருந்து டிப்போ மற்றும் வணிகக் கடைகள் இருக்கும் தளமாக இருக்குமாம். மீதம் உள்ள தளங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்கள் உள்ள தளமாக அமைக்கப்பட உள்ளதாம்.

நவீன கழிப்பறை
இந்த பேருந்து நிலைய வணிக வளாகங்களில் தியேட்டர், உள் அரங்க விளையாட்டுகள், கூட்ட அரங்கம் போன்றவை அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்காத வகையிலும், மழைநீர் வடிகால் வசதியுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள், நவீன கழிப்பறைகள் போன்றவை அமைக்கப்பட உள்ளதாம்.

சென்னை மாநகர்
இந்த திட்டம் மூலம் பேருந்து நிலையங்கள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். பயணிகளுக்கு தரமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும். மேலும் பேருந்து நிலையங்களை வணிக வளாகங்களாக மாறுவதால், பேருந்துக்காக காத்திருக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்தே இந்த முடிவினை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எடுத்திருக்கிறதாம்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications