சல்லிக்காசு இல்லை.. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாதா? 3 மாசத்தில் நிலைமை மோசமாகும்.. யார் பாருங்க
சென்னை: ஒரு அரசு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக, தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன என்றும், ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்தால் தான், தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சியில், தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்... அப்போது, வழக்கம்போல், விசிக திருமாவளவனையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பும் எச்.ராஜா, சமீபகாலமாகவே, ஆட்சியில் பங்கு கேட்டும் திருமாவின் கோரிக்கைக்கு ஆதரவு தந்து வருகிறார். திருமாவின் கோரிக்கை நியாயமானதே என்றும் வரவேற்று வருகிறார்.

பாஜக ஆட்சி: எச். ராஜா பேசும்போது, "3-வது முறையாக ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைய போகிறது.. தேர்தலில் வெற்றியை பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்த காங்கிரஸ் கூட்டணிக்கு, இதன்மூலம் தக்க பதிலடி தரப்பட்டுள்ளது..
ஒரு அரசு எப்படியெல்லாம் ஏற்பாடு செய்யக்கூடாது என்பதற்கு ஒரு அடையாளமாக சென்னை மெரினாவில் நடைபெற்ற ஏர் ஷோ நடந்துள்ளது. இந்த அரசால் மக்களுக்கு குடிநீர் கூட தரமுடியவில்லை. தன்னுடைய நண்பர்கள் நலனுக்காக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது கார் பந்தயம் நடப்பதற்கு முன்னேற்பாடுகளை தொடர்ந்து கவனித்த உதயநிதி, துணை முதல்வராக பதவியேற்ற பிறகு தன்னுடைய பணியை மறந்துவிட்டார். தமிழக போலீஸார் இதுவரையிலும் எந்த ஒரு பயங்கரவாதிகளையும் கைது செய்யவில்லை.
காவல்துறை: கஞ்சாவை தவிர வேறெந்த போதைப் பொருளையும் தமிழக காவல்துறை பிடித்ததாக தெரியவில்லை. எந்த வகையிலும் தோற்றுப்போன அரசாக திமுக ஆட்சி உள்ளது. 2026-ல் மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் கேட்டது நியாயம். ஆனால் கூட்டணிக்கு மட்டும் தான் கட்சிகள் தேவை.
அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. ஆனால், அரசின் கஜானாவை காலி செய்துவிட்டு அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில் தற்போது தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம்போட முடியாத நிலைமை தமிழகத்தில், அடுத்த 3 மாதத்தில் உருவாகும், நிர்வாக திறன்மையின்மைக்கு மத்திய அரசு குறைசொல்வதை ஏற்கமுடியாது.
ஆர்எஸ்எஸ்: அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன். அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும். ஆர்எஸ்எஸ் வளர்ந்தால்தான் தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். சமூக நீதி வேண்டும் என்றால் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். திமுக என்பது இந்து விரோத அமைப்பு தான். அதன் இந்து விரோத கொள்கைகள் மாறாது." என்றார்.
-
15,000 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம்.. தமிழக அரசின் மெத்தனம்.. அப்போ சம்பள உயர்வு கிடையாது? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications