ஆடு ‘மே..’ ட்ரெண்டான தமிழ்நாடு.. “டைவர்ட் பண்ணதான் இது.. அந்தப் பக்கம் திரும்புங்க" : டிஆர்பி ராஜா
சென்னை : "ஆளுநர் ரவி கொடுத்த 'தமிழ்நாடு' மேட்டர் ஒரு திசை திருப்பும் விஷயம் என்பதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், ஒரு நைட் ஃபுல்லா வெச்சு செஞ்சது போதும். ஆடு பக்கம் திரும்புங்க" எனத் தெரிவித்துள்ளார் திமுக ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. ஆளுநரின் கருத்துக்கு எதிராக #தமிழ்நாடு ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டான நிலையில், மீண்டும் அண்ணாமலை பக்கம் திரும்பச் சொல்லியிருக்கிறார் டிஆர்பி ராஜா.
தமிழ்நாடு என்கிற சொல்லை தவிர்த்து தமிழகம் என்கிற சொல்லை பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு கண்டனம் வலுத்தது.
இதையொட்டி, ட்விட்டரில் தமிழ்நாடு என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் ஆளுநரின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றினர். இதையடுத்து 'தமிழ்நாடு' ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்தது.

ஆளுநர் சர்ச்சை
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு பணியாற்றிய தன்னார்வலர்களை கௌரவிக்கும் வகையில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "ஒரே பாரதம் தான். அதில் நாம் எல்லோரும் அங்கம். இப்போது பாரதத்தைப் பற்றி பலரும் பேசுவது கிடையாது. தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்" என்று பேசினார்.

டாப் ட்ரெண்டிங்
ஆளுநரின் இந்த கருத்துக்கு திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ட்விட்டரில், #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் கருத்து தெரிவித்தனர். அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது, நெட்டிசன்கள் பலரும் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஹேஷ்டேக்கில் கருத்துகளைப் பதிவிட்டனர். அதன்படி ட்விட்டரில் இந்திய அளவில் "தமிழ்நாடு" என்ற வார்த்தை டிரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்தது.

போதும்.. அங்கிட்டு திரும்புங்க
இந்நிலையில், திமுக ஐடி விங் செயலாளரும், எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா, ஆளுநர் ரவி செஞ்சது டைவர்ஷன்.. அங்கிட்டு திரும்புங்க எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில்,
"#தமிழ்நாடு இது தமிழ்நாடு
ரவி ஒரு சங்கி... ஆடு #Meh
இப்போ எதுக்கு ஆடுனு சிலர் கேட்பது கேட்கிறது...
ஏன்னா ரவி கொடுத்த 'தமிழ்நாடு' மேட்டர் ஒரு #TakeDiversion matter என்பதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் தான்.
ஒரு நைட் ஃபுல்லா வெச்சு செஞ்சது போதும். ஆடு பக்கம் திரும்புங்க" எனத் தெரிவித்துள்ளார்.

திசைதிருப்ப
கடந்த சில நாட்களாக பாஜக மாநித தலைவர் அண்ணாமலை, பிரஸ்மீட்டில் பேசியது தொடர்பாகவும், பாஜகவில் நடந்து வரும் குழப்பங்கள் தொடர்பாகவும் சர்ச்சைகள் நிகழ்ந்து வந்தன. இந்தச் சூழலில் தான் ஆளுநர் ரவி தமிழ்நாடு என்று அழைக்க வேண்டாம், தமிழகம் என்றே சொல்ல வேண்டும் என்று பேசி இருக்கிறார். இதையடுத்து, அனைவரும் ஆளுநரின் கருத்துக்கு எதிராகப் பேசத் தொடங்கினர். இதைக் குறிப்பிட்டே, டிஆர்பி ராஜா, ஆளுநர் ரவி, அண்ணாமலை மேட்டரை திசைதிருப்பி இருக்கிறார். மீண்டும் அண்ணாமலை பக்கம் திரும்புங்கள் எனக் கூறி இருக்கிறார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications