அரசின் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்..சிறப்பாசிரியர்கள் நியமனம்..ரூ.5000 சம்பளம் - முழு விபரம்
சென்னை: தமிழகம் முழுவதும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு மையத்திற்கு ஓர் தற்காலிக ஆசிரியர் நியமிக்க வேண்டும் எனவும் இச்சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் ரூ.5000/- பள்ளிக் மேலாண்மைக்குழு மூலம் மாதம் தோறும் வழங்கலாம் எனவும் தமிழக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் அரசுப்பள்ளி வளாகங்களில் இயங்கி வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கான அறிவுரைகளை பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக வழங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து தற்போது, வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்
2022-2023 ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து செயல்பட அரசாணை (நிலை) எண்.164 வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள்
2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு மையத்திற்கு ஓர் தற்காலிக ஆசிரியர் நியமிக்க வேண்டும். இம்மையங்களில் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளை கையாள இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு பயிற்சி தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்க வேண்டும்.

தற்காலிக ஆசிரியர்கள்
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்ய வேண்டும். இவர்களது பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது.

ரூ.5000 சம்பளம்
இச்சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் ரூ.5000/- பள்ளிக் மேலாண்மைக்குழு மூலம் மாதம் தோறும் வழங்கலாம். இதற்கான நிதி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு விடுவிக்கப்படும். மேற்காண் தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கான பணிநேரம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை.

சிறப்பு பயிற்சிகள்
இந்த தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலமாகும் மற்றும் பள்ளியின் கடைசி வேலை நாளன்று விடுவிக்கப்படுவர். தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளை கையாளுவதற்கு தேவையான சிறப்பு பயிற்சிகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படும்.

நியமனம் செய்ய உத்தரவு
பயிற்சி நடைபெறும் நாட்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும். மேற்காண்ட நடைமுறைகளை பின்பற்றி 14.10.2022க்குள் தற்காலிக சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்து பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications