மக்கள் அனுமதியில்லாமல் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது - தமிழக அரசு அரசாணை வெளியீடு
டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் விதிகளில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
சென்னை: டாஸ்மாக் மதுக்கடையைத் திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை பரிசீலித்து கடையை திறக்கக்கூடாது என சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது. ஆனால் அத்தகைய இடங்களில் சில ஊர்களில் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இதனையடுத்து சில நாள்கள் கடைகள் அடைக்கப்பட்டு பின்னர் மீண்டும் அதே இடத்தில் கடைகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க மக்களுக்கு அதிகாரம் அளித்து தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது.
டாஸ்மாக் மதுக்கடை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் விதிகளில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications