"சின்னபொண்ணு" நானா.. அந்த குடை பிடிச்ச சம்பவம் இருக்கே.. "வா..ம்மா, போ..ம்மா".. பூரித்த மேயர் பிரியா
மேயர் பிரியா, சேகர்பாபுவுக்கு குடை பிடித்தது குறித்த விவகாரம் குறித்து விளக்கம் தந்துள்ளார்
சென்னை: நடந்த சம்பவங்கள் எது என்று முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே, என்னை சோஷியல் மீடியாவில் சிலர் டிரோல் செய்வது, மனதுக்கு வருத்தமாக இருக்கிறது என்று சென்னை மேயர் பிரியா வேதனை தெரிவித்துள்ளார்.
பிரியா மேயராக பதவியேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கும் போதெல்லாம் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட சீனியர்கள் அவருக்கு அருகிலேயே இருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர்..
அமைச்சர் சேகர்பாபு ஒருமுறை, "அவருக்கு பேச தெரியாது. அவர் ஒரு குழந்தை" என்றார்.. வயது எதுவானாலும், மதிப்பிற்குரிய பதவிக்கு வந்துவிட்டவரை, சேகர்பாபு இப்படி சொன்னது பரபரப்பாக பேசப்பட்டது..

ஏடாகூடம்
அதேபோல, மேயர் பிரியா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதெல்லாம், பல நேரங்களில் விஷயம் தெரியாமல் திணறியதாகவும் சொல்லப்பட்டது.. அப்படித்தான் பலமுறை ஏடாகூடமாக பேசி சலசலப்புகளில் சிக்கினார்.. அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.. இதற்கு பிறகுதான்,செய்தியாளர் சந்திப்புகளுக்கு வருவதை பெரும்பாலும் பிரியா தவிர்த்து வந்ததாகவும் சொல்லப்பட்டது.. இப்படி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து, இப்போது வரை தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார் பிரியா.. அதேசமயம், மிக பொறுப்புடன் சென்னையின் நலனில் அவர் காட்டி வரும் அக்கறை, பரவலாக வரவேற்பை பெற்று வருவதையும் மறுக்க முடியாது..!

ஸ்பாட்டில் ப்ரியா
இந்த முறை சென்னையில் மழை வெள்ளத்தின்போது, நள்ளிரவு என்றும் பாராமல் ஸ்பாட்டுக்கு சென்று ஆய்வு நடத்தினார் பிரியா.. மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கையை ஆணையருடன் சேர்ந்து எடுத்தார்.. சில மாதங்களுக்கு முன்பு வடிகால் கால்வாய் அமைக்கும் பணியை தீவிரப்படுத்திய நிலையில், கடந்த ஆண்டு தேங்கிய சாலையில் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை என்ற பாராட்டு திமுக அரசுக்கு கிடைத்து வருகிறது..

சின்னபொண்ணு
இந்நிலையில், ஒரு டிவி சேனலுக்கு மேயர் பிரியா, தன்னுடைய முதல் பேட்டியை தந்துள்ளார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.. குறிப்பாக, சின்னப்பொண்ணு என்று சீனியர் அமைச்சர்கள் பிரியாவை குறிப்பிட்டது முதல், சேகர்பாபுவுக்கு குடை பிடித்த விவகாரம் வரை கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு மேயர் பிரியா நீண்ட விளக்கங்கள் தந்திருந்தார்.. அதன் சுருக்கம்தான் இது:

ஹேப்பி நியூஸ்
"கவுன்சிலர் போஸ்டிங்கிற்கு நிற்கிறாயா? என்று என் அப்பா கேட்டார்.. எனக்கும் அரசியல் ஆர்வம் இருந்தது.. அதனால், கவுன்சிலர் தேர்வுக்கு நின்றேன்.. ஆனால், மேயர் பதவியை கொஞ்சமும் நான் எதிர்பார்க்கவில்லை.. கவுன்சிலராக பதவியேற்றபோதுகூட, ஒருசிலர் வந்து சொன்னாங்க, மேயர் லிஸ்ட்டில் உங்க பெயரும் இருக்கிறது என்றார்கள்.. அப்போதுகூட நான் நம்பல.. நான்தான் மேயர் என்று டிவியில் அறிவிப்பு வந்தபிறகுதான் எனக்கு தெரிந்தது.. எனக்கு இப்போது 28 வயதாகிறது.. இந்த வயதில் எனக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது..

சேலஞ்ச்
என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே அனுபவசாலிகள்.. அதேபோல, மாண்புமிகு முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், இந்த மேயர் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள்.. இந்த துறையில் ஏற்கனவே சாதித்து காட்டியவர்கள்.. அவர்கள் அளவுக்கு என்னால் சிறப்பாக செயல்பட முடியுமா தெரியவில்லை, ஆனால், என்னால் முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றுவேன்.. மதிப்புக்குரிய ஆணையர் அவர்கள், எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார்.. நான் இந்த பதவியை ஏற்றுக்கொண்டபோது, ஆணையர்தான் எனக்கு நிறைய துறைரீதியான விஷயங்களை விளக்கமாக எடுத்து சொன்னார்..

சின்னப்பொண்ணு
சின்னப்பெண்ணாக என்னை யாரும் நடத்தவில்லை.. மேயர் என்ற பதவிக்கு தரவேண்டிய மரியாதையை மூத்த தலைவர்கள், கண்டிப்பாக தருகிறார்கள்... "வா..ம்மா, போ..ம்மா" என்று சொல்வதெல்லாம் சாதாரணமாக எல்லாரும் பேசக்கூடிய இயல்பான விஷயம்தானே.. ஒரு மகளிடம் பேசுவது போலவே பேசுகிறார்கள்.. உரிமையில் பேசுவதால், தவறாக நான் நினைக்கவில்லை, என்னை அது பாதிக்கவும் இல்லை.. அதேபோல, அமைச்சருக்கு குடைப்பிடிப்பதாக சொல்கிறார்கள்.. இந்த குடை பிடிக்கும் சம்பவம், கிராப் செய்யப்பட்டது..

ட்ரோல்
அதற்கு முன்பு, அமைச்சர் அவர்கள் எனக்கு குடை பிடித்தார்.. ஆனால், அதை பற்றி யாருமே பேசவில்லை.. முதல்நாளில் இருந்தே சோஷியல் மீடியாவில் நிறைய விமர்சனங்கள் என்மீது வந்து கொண்டுதான் இருக்கிறது.. அதில் ஒருசில விமர்சனங்கள் என்னை காயப்படுத்தவே செய்கிறது.. நடந்த சம்பவம் எது என்று முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே என்னை டிரோல் செய்வது, மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.. உதாரணத்துக்கு இந்த குடை விவகாரத்தையே எடுத்துக் கொண்டால், மழை பெய்தால், எல்லாருமே குடைபிடிக்கத்தான் செய்வார்கள்..

குடை + கிராப்
அன்றைய தினம், நானும், அமைச்சரும் கூட்டம் தொடர்பாக ஆலோசிக்க வேண்டியிருந்ததால், குடை பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. மற்றபடி, அவருக்கு நான் குடைபிடிக்க வேண்டிய அவசியமோ, எனக்கு அவர் குடை பிடிக்க வேண்டிய அவசியமோ இல்லை.. இன்னும் சொல்லப்போனால், அந்த வீடியோவை முழுமையாக பார்த்தால், மாண்புமிகு அமைச்சர், எனக்கும் குடை பிடித்தார்.. ஆனால், நான் அவருக்கு குடை பிடித்ததை மட்டும், கிராப் செய்து போட்டுவிட்டார்கள்.. "குழந்தை" என்று என்னை வெளிப்படுத்த வேண்டிய நோக்கம் யாருக்கும் கிடையாது.. செய்தியாளர்கள் கூட்டம் முடிந்த பிறகுதான் அந்த வார்த்தையை அன்று அமைச்சர் சொன்னார்.. ஆனால், அதை பெரிதுப்படுத்திவிட்டார்கள் என்றே நினைக்கிறேன் என்கிறார் பிரியா.












Click it and Unblock the Notifications