பச்சை கொடி 10000 பட்டாசு கடைகளுக்கு.. தடையில்லா சான்றிதழ் கிடைச்சாச்சு! பட்டாசு வெடிக்க டைம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பட்டாசுக் கடைகள் அமைக்க 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், எத்தனை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்ற விவரமும் வெளியாகியுள்ளது. இதனிடையே, தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரம் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்த தீயணைப்புத் துறை, 10,244 விண்ணப்பங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.

Firecracker License Diwali Celebrations Green Crackers

10 ஆயிரம் பட்டாசு கடைகள்

மொத்தம் 12,098 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 940 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 914 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

பட்டாசுக் கடைகள் அமைக்க தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகிய மூன்று துறைகளிடமும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இதில் தீயணைப்புத் துறையின் சான்றிதழ் பெற்ற பிறகே மற்ற துறைகளிடம் அனுமதி பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

பட்டாசு வெடிக்க 2 மணி நேரம்

இந்த வருடம் நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான நேரக்கட்டுப்பாட்டையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், 2018ம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கபடுகிறது.

அதேபோல், இந்த ஆண்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பசுமைப் பட்டாசுகள்

மேலும் மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்கள், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

பொதுமக்கள், அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடி போன்ற பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் எனவும், குறைந்த ஒலியுடன் குறைந்த காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+