சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

‛யூனியன்’ பிரதேசம் என்பது ‛ஒன்றிய’ பிரதேசமானது... டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளில் மொழிப்பெயர்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் Union Territory (யூனியன் பிரதேசம்) என்பது ‛ஒன்றிய பிரதேசம்' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஒன்றிய அரசு என கூறிவரும் நிலையில் வினாத்தாளில் யூனியன் பிரதேசம் என்பது ஒன்றிய பிரதேசமாக குறிப்பிடப்பட்டு இருப்பது விவாதப்பொருளாகி உள்ளது.

தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2, 2ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. குரூப் 2வில் 116 பணியிடம், குரூப் 2ஏ பதவிக்கு 5,413 இடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. மொத்தமாக குரூப் 2, குரூப் 2ஏ-வில் 5,529 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் 6.82 லட்சம் பேர் பெண்கள் ஆவார்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு : 11.78 லட்சம் பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர் - இது அவசியம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு : 11.78 லட்சம் பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர் - இது அவசியம்

இன்று தேர்வு

இன்று தேர்வு

இந்நிலையில் இன்று முதல் நிலை தேர்வு நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 117 இடங்களில் 4012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 8.30 மணி அதிகபட்சமாக 8 மணி 59 நிமிடங்கள் வரை விண்ணப்பம் செய்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. காலை 9.30 மணிக்கு தேர்வுகள் துவங்கி மதியம் 12.30 மணி வரை நடந்தது.

விவாதமான கேள்வி

விவாதமான கேள்வி

தலைமை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர், பறக்கும் படையினர், பரிசோதனை குழு மூலம் தேர்வு அமைதியாக நடந்து முடிந்தது. முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் வினாத்தாளில் இடம்பெற்ற கேள்வி விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.

ஒன்றிய பிரதேசங்களின்..

ஒன்றிய பிரதேசங்களின்..

அதாவது Union Terroritory என்பதை பயன்படுத்தி ஒரு கேள்வி ஆங்கிலத்தில் கேட்கப்பட்டு இருந்தது. இது தமிழில், ‛‛ஒன்றிய பிரதேசங்களின்'' என மொழி பெயர்க்கப்பட்டு இருந்தது. அதாவது ‛‛கீழ்க்காணப்படுபவைகளில் எது ‛ஒன்றிய பிரதேசங்களின்' முந்தைய பெயர்கள் கிடையாது?'' என கேள்வி அமைந்திருந்தது. இதில் யூனியன் பிரதேசம் என்பது ஒன்றிய பிரதேசம் என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதுதான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

மத்திய அரசை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு வருகின்றன. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் யூனியன் என்பதன் தமிழ் அர்த்தம் ‛ஒன்றியம்' என திமுக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு தொடர்ந்து ஒன்றியம் எனும் வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தான் இன்றைய தேர்வுக்கான வினாத்தாளிலும் யூனியன் பிரதேசம் என்பது ‛ஒன்றிய பிரதேசம்' என மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Union Territory has been translated as 'Ontriya Pradesham' in a TNPSC Group 2, 2A examinations in Tamil Nadu . It is a matter of controversy that DMK and its allies claim the Union Government as the Ontriya Arasu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X