பெரியார் இருக்க சவார்க்கர் ஏன்? தமிழகத்தில் குஜராத் மாடலை நம்பாதீங்க! போட்டு தாக்கிய ஜிக்னேஷ் மேவானி
சென்னை : தமிழகத்தில் பாஜக வர வேலை மற்றும் கடுமையான முயற்சி செய்கிறார்கள், அவர்களை வர விடாதீர்கள் எனவும், குஜராத் மாடலை ஏற்றுக்கொள்ளாதீர்கள் அதன் கொடுமை தங்களுக்கு நன்றாக தெரியும் என குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலினத்தவர் பிரிவின் சார்பாக 'தலித் உண்மைகள்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டார்.

ஜிக்னேஷ் மேவானி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஜிக்னேஷ், " ஒரு தலித் இல்லாத சாதியினர் தீண்டாமையை பின்பற்றும் போது அவர்களின் கஷ்டம் தெரியும்.

தமிழகத்தில் பாஜக
மதம் மற்றும் சாதி ஒன்றிணைந்த ஒன்று. அதை எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் பாஜக வர வேலை மற்றும் முயற்சி செய்கிறார்கள். அவர்களை வர விடாதீர்கள், குஜராத் மாடலை ஏற்றுக்கொள்ளாதீர்கள். அதன் கொடுமை தங்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் தமிழகத்திற்கு சாவர்கார் தேவையில்லை, பெரியாரை கொண்டாடுங்கள்.

குஜராத் மாடல் தேவையில்லை
தமிழகத்தில் பாஜக காலூன்ற வேகமாக செல்கிறது என்றும் தமிழகத்தில் பாஜக தேவையில்லை. தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் என்றும் அந்த மாடலை தங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் அதன் கொடுமை தெரிந்ததால்தான் இதனை நாங்கள் கூறுகிறோம். சாதி மிகவும் கடினமான ஒன்று.

முழு சர்வாதிகார இயக்கம்
சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு படிநிலையும் அழிக்கும் ஒன்று. பிஜேபி மற்றும் ஆர்.எஸ். எஸ் இயக்கம் முழு சர்வாதிகார இயக்கம். தலித் மக்களை காப்பதற்கு நாம் அனைத்தையும் செய்ய வேண்டும். இது நமக்கு ஒரு சவால். தலித் இயக்கம் பல விதங்களில் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். அவர்களின் இயக்கம் மிகவும் முக்கியமான ஒன்று" என அவர் கூறினார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications