"கையை கடிச்சிடுச்சு".. டாக்டர் கிருஷ்ணசாமி ஆரம்பித்த "புது அணி".. பாஜகவும் அடக்கம்.. என்னன்னு பாருங்க

டாக்டர் கிருஷ்ணசாமி புதிய அணியை உருவாக்கி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தருவது அனைத்து கட்சிகளுக்குமே கையை கடிக்கிறது, இனி வருங்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதை பற்றியே நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பணம் விளையாடுகிறது, இதெல்லாம் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே மும்முரமாக களப்பணியில் ஈடுபட்டனர்.

தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயம் இரு கட்சிகளுக்கு ஏற்பட்டது.. இதனால், பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்கள் வெளிவந்தன.. ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்படுவதாக கூறப்பட்டன.

 வீடியோ

வீடியோ

திமுகதான் இத்தகைய அராஜகங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதுகுறித்து வீடியோ ஆதாரங்கள் தந்தாலும் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அதிமுக, பாஜக கட்சிகள் மாறி மாறி குற்றஞ்சாட்டின.. ஆனால் பல இடங்களில் அதிமுக, பாஜகவும், பரிசு பொருட்களை தந்து கையும் களவுமாக சிக்கியதாக செய்திகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில், இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்,பாஜக , அமமுக உள்ளிட்ட பலர் கட்சிகள் கலந்து கொண்டன... குறிப்பாக, பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, அமமுக செந்தமிழன், ஃபார்வார்டு பிளாக் நல்லுச்சாமி, முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் மூர்த்தி, சமக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாடி கட்சி, குடியரசு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 கிருஷ்ணசாமி பேட்டி

கிருஷ்ணசாமி பேட்டி

இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி சொன்னதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2019ல் நடந்த எம்பி தேர்தல், 2021ல் நடந்த சட்டசபை தேர்தல், இதைதவிர, பல இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது... குறிப்பிட்டு எந்த கட்சியையும் குற்றம்சாட்டவில்லை... ஆனால், மக்களவை தேர்தல், இடைத்தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கும் மோசமான சூழல் நிலவியது. இது இனிமேலும் நீடிக்க கூடாது.

கலாச்சாரம்

கலாச்சாரம்

தேர்தல்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தையும், மாநில தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்தும் வகையில் இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.. வாக்காளர்களுக்கு பணம் தரும் கலாச்சாரம் பெருந்தொற்றாக பரவி வரும்நிலையில், வாக்காளர்களே அரசியல் கட்சிகளிடம் பணத்தை கேட்டுப்பெறும் சூழல் உருவாகி விட்டது..

தேர்தல்

தேர்தல்

அதனால், தேர்தல்களில் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.. இதற்காக இங்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஆலோசித்தோம்.. எதிர்காலத்தில் ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தி, மே 1ம் தேதி முதல் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.. வாக்காளர்களுக்கு பணம் தரும் சூழலுக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்படுகின்றன... தேர்தலில் அனைத்து வேட்பாளர்களும் பணம் செலவழித்தாலும் ஒருவர் தான் வெற்றி பெறுகிறார்.. அப்படியானால் மற்றவர்கள் செலவழித்த பணம் வீணாகிறது.

 கையை கடிக்கிறது

கையை கடிக்கிறது

அதனால், யாருமே பணம் செலவழிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்த அணியை உருவாக்கி உள்ளோம். இது தேர்தலுக்கான அணி கிடையாது.. ஊழலை ஒழிப்பதற்கான அணி... தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தருவது அனைத்து கட்சிகளுக்குமே கையை கடிக்கிறது.. இனிமேல் வருங்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதை பற்றியே நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பணம் விளையாடி கொண்டிருக்கிறது"என்று வேதனையுடன் தெரிவித்தார் கிருஷ்ணசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+