குழப்பியடித்த பிரேமலதா.. திமுக மீது பாய்ந்ததுமே ஓடிவந்த தலைவர்.. விருதுநகரில் சம்பவம் செஞ்சாச்சு
சென்னை: தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், திமுக மீது வீசியிருந்த குற்றச்சாட்டுகளுக்கு, காங்கிரஸ் தரப்பு காரசாரமாக பதிலளித்துள்ளது.
விருதுநகரில் விஜய பிரபாகரன் தோல்வி குறித்து , தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு காரணங்களை அடுக்கியிருந்தார்.. விஜயபிரபாகரன் தோற்றதற்கு காரணமே திமுக தான் என்றும் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

பிரேமலதா அப்போது சொல்லும்போது, " விஜய பிரபாகரன் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். திட்டமிட்டு, சூழ்ச்சியால் தோல்வியடைய செய்துள்ளனர். அதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளது.
அழுத்தம்: 3 முதல் 5 மணி வரை எதற்காக உணவு இடைவெளி என வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது? கலெக்டர், எனக்கு அழுத்தமாக இருக்கிறது, எனது போனை அனைத்து வைப்பதாக சொல்கிறார் என்றால், அவருக்கு அழுத்தம் தந்தது யார்? விருதுநகரில் மட்டும் நள்ளிரவு வரை தபால் ஓட்டு எண்ணப்பட்டது ஏன்? தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே, 40 தொகுதிகளிலும் திமுக வென்றது என எப்படி ஒரு முதல்வர் சொல்லுவார்?
மதுரையில் உள்ள ஒரு அமைச்சர் விருதுநகருக்கு இரவு 1 மணிக்கு சென்று ஏன் அங்கே வெற்றி சான்றிதழைப் பெற வேண்டும்? ஒரு சின்ன பையன் முதல் முறையாக தேர்தலில் நிற்கும்போது, அதில் சூழ்ச்சி செய்ய வேண்டிய அவசியம் என்ன?" என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டிருந்தார் பிரேமலதா.
சின்ன பையன்: அதுமட்டுமல்லாமல், விருதுநகரில் மறு வாக்குஎண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் தேமுதிக தரப்பில் புகார் மனு தரப்பட்டுள்ளது. ஒருவேளை தேர்தல் ஆணையம் இதில் முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால், கோர்ட்டுக்கு போக போவதாகவும் தேமுதிக அறிவித்திருக்கிறது.
பிரேமலதாவின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டுகள் அரசியல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.. சோஷியல் மீடியாவிலும் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருந்தன.
விஜயகாந்த்: "விஜயகாந்த் மீது எல்லாருக்கும் நல்ல மதிப்பு உண்டு.. அதை அப்படியே மகனுக்கும் எதிர்பார்ப்பது சரி இல்லை... இது மக்கள் தந்த முடிவு. இதை ஒரு தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு விமர்சிப்பது நாகரீகம் கிடையாது.. தேர்தல் களத்தில்"சின்னபையன்" என்றெல்லாம் கரிசனத்தை எதிர்பார்க்க கூடாது.. மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும்" என்று இணையவாசிகளும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தேமுதிகவின் குற்றச்சாட்டை விமர்சித்துள்ளார்.. ரிசல்ட் வந்து அடுத்த நாளே, பிரேமலதா விஜயகாந்த் இப்படி பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர்: மதுரை திருநகர் எம்பி அலுவலகத்தில் வாளுக்கு வேலி அம்பலத்தின் 223ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படத்திற்கு மாணிக்கம் தாகூர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை தழுவியதால் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய பிரபாகரன் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறினார்கள்... விருதுநகர் தேர்தலில் வீடியோ கண்காணிப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிந்து, மறுநாள் சென்னையில் உட்கார்ந்து கொண்டு, பிரமலதா விஜயகாந்த் பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு. பொறுப்பில்லாத பேச்சை பிரேமலதா விஜயகாந்த் செய்கிறார்.
விருதுநகர் தொகுதி: மூன்றாவது முறையாக விருதுநகர் தொகுதியில் தேமுதிக தோல்வியை தழுவியிருக்கிறது என்பதே உண்மை. விஜயகாந்த் இருக்கும்போதே தேமுதிக விருதுநகர் தொகுதியில் தோல்வி தழுவி இருக்கிறார்கள்.
பாஜக ஆயுட்காலம் இந்த முறை பீகார் தேர்தலில் முடிந்து, இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையும். எப்போதெல்லாம் பாஜக ஆட்சி அமைகிறதோ அப்போதெல்லாம் தீவிரவாத தாக்குதல் நடைபெறுகிறது. பலமான நாடு பாதுகாப்பான நாடு என்றெல்லாம் பிரதமர் சொல்கிறார்.. இப்படி ஒரு தாக்குதல் சம்பவம் நடந்ததற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலை குனிய வேண்டும்...
கேபினட் அமைச்சர்: இந்த முறையும் மறுபடியும் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது. ஒரு கேபினட் அமைச்சரை தமிழகத்திற்கு பாஜக தந்திருக்க வேண்டும். ஒரு கேபினட் அமைச்சரை பதவியில் உட்கார வைக்க இந்த அரசுக்கு மனமில்லை... பாஜகவின் வளர்ச்சியை பற்றி அதிமுக நன்றாக யோசனை செய்ய வேண்டும்" என்றார் மாணிக்கம் தாகூர்.
-
கடலூரில் நடந்தது என்ன.. திருமாவளவனிடம் மனம் விட்டு பேசிய பிரேமலதா.. பரபரப்பு பின்னணி -
சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து! கருகிய நிலையில் ஒரு சடலம் மீட்பு! 9 பேர் படுகாயம்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications