Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அங்கேயே கை வைத்த அண்ணாமலை.. அலர்ட் ஆன அதிமுக..பாஜகவை கழட்டிவிட்ட பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலை நடத்தும் என் மண் என் மக்கள் யாத்திரை திமுகவிற்கு எதிராக பாஜகதான் என்பதை போல காட்டப்பட்டது. கொங்கு மண்டலத்தில் நேற்று முந்தாநாள் முதல் பாதயாத்திரையில் அதிக முன்னிறுத்தல் நடந்தது. இதனால் அலார்ட் ஆன அதிமுக, கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொதுவாக தமிழக அரசியல் எப்படி இருக்கும் என்றால், அதிமுக திமுக என்று தான் இருக்கும். ஆனால் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு அந்த டிரெண்ட் அப்படியே மாறியது. திமுகவில் ஸ்டாலின் தான் எல்லாம் என்கிற நிலை உருவானது. ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை. ஜெயலலிதா தனக்கு பிறகு யாரையும் தலைவராக வர வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்லவில்லை.

Have you noticed Annamalai crowd in Kongu Zone? Why has AIADMK broke alliance with BJP?

இதனால் ஓபிஎஸ், இபிஎஸ் என இரட்டை தலைமை உருவானது. இந்த இரட்டை தலைமையால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. அப்போதே பாஜக கூட்டணியில் போட்டியிட்டதால் தான் தோல்வி ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு இருந்தது.

இந்நிலையில் 2021 சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது. கொங்கு மண்டலத்தில மட்டும் ஓரளவு செல்வாக்கு காரணமாக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றது அதிமுக. இதனிடையே சென்னை, வட மாவட்டம், தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிமுக தோற்றுப்போனதற்கு பாஜக உடன் வைத்த கூட்டணி தான் காரணம் என்றும் அப்போது சலசலப்பு எழுந்தது.சிவி சண்முகம் வெளிப்படையாகவே பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தோற்றுப் போனோம் என்று விமர்சித்தார்.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், அதிமுகவை விட பாஜகவே அதிக அளவில் ஆளும் கட்சியை விமர்சித்தது. அண்ணாமலை பாஜக மாநில தலைவர் ஆன பின்னர், பாஜகவை பெரிய அளவில் வளர்க்க விரும்பினார். பல முக்கிய பிரமுகர்களை பாஜகவில் இணைத்தார். அதேநேரம் திமுகுவிற்கு பிரதான எதிர்க்கட்சி பாஜக என்கிற தோற்றத்தை உருவாக்க முயன்றார். தினமும் பல்வேறு விஷயங்களில் திமுகவை கடுமையாக எதிர்த்தார். அதிமுக இரட்டை தலைமை பிரச்சனையில் சிக்கி இருந்ததால், அதிமுகவை விட பாஜகவே பெரிய கட்சி என்பது போல் அண்ணாமலை முன்னிறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் படிப்படியாக இரட்டை தலைமை பிரச்சனை ஓய்ந்து ஒற்றை தலைமையாக அதிமுக மாறியது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். அதுவரை அமைதியாக இருந்த எடப்பாடி, அதன்பின்னர் அதிரடிய காட்ட தொடங்கினார். அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தவே இப்படி பேசிவருவதாக செய்தியாளர்களிடமே நேரடியாக ஒரு முறை விமர்சித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய விவகாரத்தை கையில் எடுத்த எடப்பாடி பழனிசாமி, அதை வைத்து கடுமையாக அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுத்தார்.

அதன்பின்னர் அதிமுக தலைமையிடம் டெல்லி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தது. அதன்பின்னர் அண்ணாமலை செய்த எதையுமே அதிமுக தலைமை ரசிக்கவில்லையாம். 'என் மண் என் மக்கள் யாத்திரை' என்பது திமுகவிற்கு எதிரானது என்று கூறி நடத்தி வரும் அண்ணாமலை, தன்னை முன்னிலைப்படுத்தவே அப்படி நடத்துவதாக அதிமுக தலைமை நினைக்கிறதாம். நாடாளுமன்ற தேர்தலிலும் இரட்டை இலக்கத்தில் சீட் கேட்கவும் அண்ணாமலை திட்டமிட்டதால் எடப்பாடி தரப்பு அதிர்ச்சி அடைந்தது.

தமிழ்நாட்டில் முன்பைவிட பாஜக வலிமையான கட்சியாக மாறிவிட்டதாக அண்ணாமலை டெல்லி தலையிடம் எடுத்துரைத்து வந்த நிலையில், எடப்பாடி தரப்பும் இதை எதையுமே ரசிக்கவில்லையாம். அதேநேரம் நேரம் கிடைக்கும் போது எல்லாம் அண்ணாமலை, அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து வந்தார். குறிப்பாக திமுகவை விமர்சிக்கும் அதேநேரம் அதிமுகவையும் விமர்சித்தே வந்தார். திமுக உடன் சேர்த்து திராவிட கட்சிகள் ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்ற தோற்றத்தை அண்ணாமலை முன்னிறுத்த முயன்றதை அதிமுக தலைமை கடுமையாக எதிர்த்தது.

Have you noticed Annamalai crowd in Kongu Zone? Why has AIADMK broke alliance with BJP?

ஒரு கட்டத்தில் அண்ணா விவகாரத்தில் அண்ணாமயை பேசியதை அதிமுக விமர்சிக்க தொடங்கியது. அப்போது எடப்பாடி பழனிசாமியை நான் எப்படி முதல்வராக அறிவிக்க முடியும் என்று அண்ணாமலை பேசினார். அப்போது அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி, எடப்பாடி பழனிசாமியை மிக மோசமாக விமர்சித்ததை பார்த்து அதிமுகவினர் கடும் கோபம் அடைந்தனர். இதையடுத்து பாஜக மாநில தலைமை பொறுப்பில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று டெல்லி என்று அதிமுக தலைமை வலியுறுத்தியதாம். ஆனால் டெல்லி மேலிடம் அண்ணாமலையை மாற்ற மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் அண்ணாமலையின் கொங்கு மண்டல யாத்திரை நேற்று முன்தினம் தொடங்கியது..இந்த யாத்திரையை பார்த்த எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அப்செட் ஆனதாம். கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக உள்ளது. அங்கு அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தவே யாத்திரை நடத்துவதாக சந்தேகித்த அதிமுக தலைமை, அதிரடியாக கூட்டணியை முறிக்க முடிவு செய்ததாம். ஏற்கனவே அதிமுக நிர்வாகிகள் பலர் பாஜக கூட்டணியை விட்டு விலக வலியுறுத்தி வந்த நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி இன்றைய கூட்டத்தில் ஒப்புக்கொண்டார். அதன்பிறகே பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+